அவ பழைய காதலனுடன் நைட் பார்ட்டில. சனம் ஷெட்டி குறித்து ஷாக்கிங் தகவலை சொன்ன தர்ஷன்.

0
43490
tharshan-sanam-shetty
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட தர்ஷன் மீது மாடல் அழகியும் நடிகையுமான சனம் ஷெட்டி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்தவர் மாடலும் நடிகருமான தர்ஷன் பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என்று ரசிகர்களும் சக போட்டியாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக தர்ஷன் வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

-விளம்பரம்-

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் இருந்தபோது நடிகை சனம் ஷெட்டி தான் தான் தர்ஷன் இன் காதலி என்று அடிக்கடி கூறி வந்தார். அதேபோலத் தர்ஷனுக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். ஆனால், தர்ஷன் ஷெரினுடன் நெருக்கமாக இருந்ததை கண்ட சனம் ஷெட்டி இனி தர்ஷன் வாழ்வில் தான் குறுக்கிட மாட்டேன் என்று அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தர்ஷனுக்கும் தமக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நேற்று புதிய குண்டை தூக்கிப் போட்டு நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார் சனம் ஷெட்டி.

இதையும் பாருங்க : பாடிகார்ட்சுடன் பைக் ஒட்டி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ரஜினி பட நடிகை. வைரலாகும் வீடியோ.

- Advertisement -

மேலும் தர்ஷன் தன்மை ஏமாற்றிவிட்டதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் நடிகை சனம் ஷெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் விரும்பப்பட்ட தர்ஷனா இப்படி ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று பலரும் புலம்பிக் கொண்டிருக்கையில் சமீபத்தில் தர்ஷன் பத்திரிக்கையாளர் கல் சந்திப்பில் கலந்து கொண்டு சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் அந்த பேட்டியில் பேசிய தர்ஷன் தனக்கும் சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார் ஆனால் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு தங்களது திருமணம் குறித்து முடிவெடுக்கலாம் என்று சனம் சீட்டு இடம் கூறியதாகவும் ஆனால் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சனம் ஷெட்டி பிகினி போட்டோ ஷூட் நடத்தியதால் அதுகுறித்து தான் கேட்டதாகவும் அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் தன் மீது நம்பிக்கை இல்லாமல் நான் எந்த ஒரு இடத்திற்கும் தனியாக செல்லக்கூடாது எந்த ஒரு பிக்பாஸ் பெண் போட்டியாளர்கள் இடமும் பேசக்கூடாது என்றும் தன்னை டார்ச்சர் செய்ததாக தர்ஷன் கூறியுள்ளார்.

This image has an empty alt attribute; its file name is 1-57.jpg

-விளம்பரம்-

இதுகுறித்து மேலும் பேசிய தரிசனம் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் எனக்கும் அவளுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. அடிக்கடி என்னை திருமணம் செய்துகொள் இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினால் . மேலும், எனக்கும் உனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பதை நீ மீடியாவிடம் சொல்லவேண்டும் என்று கூறினார். ஆனால், உனக்கு வேண்டுமானால் நீ சொல்லிக் கொள் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று நான் கூறி விட்டேன். அதேபோல என்னை வைத்து படம் எடுப்பதாக இருந்த மூன்று தயாரிப்பாளரிடம் சென்று என்னை பற்றி தவறாக கூறி என்னுடைய வாழ்க்கையை அழிக்க பார்த்தால். அவள் தான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஷெரீனை அன்பாலோ செய்தார். ஆனால் ஷெரினிடம் நான் சனம் ஷெட்டியை காதலிப்பதை எப்போதோ கூறிவிட்டேன். அவளும் இனி நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறிவிட்டாள். அதற்குப் பின்னரும் என்னை இவள் தொடர்ந்து டார்ச்சர் செய்து கொண்டே இருந்தாள் எனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நேற்று பேசியுள்ளார்.

இதையும் பாருங்க : 45 லட்ச ரூபாய் வீட்டை விற்று தற்போது சலம்டாக் மில்லினர் பட சிறுவன் குடும்பம் எங்கு வாழ்கிறார்கள் பாருங்க.

ஆனால், சத்யா மற்றும் ரம்யா(பிக் பாஸ் ரம்யா) திருமண நிகழ்ச்சிக்கு அவள் சென்ற போது அங்கே அவளுடைய முன்னாள் காதலன் வந்திருக்கிறான். அவருடன் சேர்ந்து இரவு பார்ட்டியில் ஒன்றாக இருந்திருக்கிறார். அதே அவர்களே என்னிடம் சொன்னார்கள். அதை நான் எப்படி கூற வேண்டும் என்று தெரியவில்லை. அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார் தர்ஷன். அதேபோல சனம் ஷெட்டி தர்ஷன் எனக்கு 15 லட்சம் வரை பண உதவி செய்துள்ளதாக நேற்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த தர்ஷன் நான் என்னுடைய Tax பிரச்சனைக்காக ஒரு 3.5 லட்சத்தை வாங்கியிருந்தேன். அதையும் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் கொடுத்துவிட்டேன். அதேபோல எங்களின் நிச்சயதார்த்தத்தின் போது ஒரு 2.5 லட்சம் செலவானது அதை மட்டும்தான் நான் இன்னும் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement