தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்த நடிகை அமலா பால் இயக்குனர் விஜயுடன் விவாகரத்து ஆன பிறகு பெயர் டேமேஜ் ஆகி மார்க்கெட்டில் கொஞ்சம் சருக்களை கண்டார். இருப்பினும் தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இயக்குனர் ராம்குமார்:
சமீபத்தில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில் வெளியான “ராட்சசன்”படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எத்ரிபாரத வெற்றியடைந்த நிலையில் பட குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இதற்காக அடிக்கடி சக்சஸ் மீட்களையும் வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகை அமலா பால் படத்தின் இயக்குனர் ராம் குமார் குறித்து பேசுகையில், இந்த படத்தில் விஷ்ணு விஷால் தான் இயக்குனர் ராம் குமாரிடம் பேசி எனக்கு வாய்ப்பை வாங்கி தந்தார்.
இயக்குனர் ராம் குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் இங்கே பலருக்கும் தெரியாது. அவர் இன்னமும் பேச்சுலர் தான் ஆனால்,அவர் நல்ல பேச்சுலர். இந்த படத்தில் எனக்கு வாய்பளித்தற்கு நன்றி தெரிவிப்பதற்காக நான் அவரை தனியாக சந்திக்க சென்றேன். ஆனால், நான் தனியாக வருவதை தெரிந்து அவர் அங்கிருந்து பயந்து ஓடிவிட்டர் என்று கிண்டலாக கூறியுள்ளார் நடிகை அமலா பால்.
மேலும், metoo விவகாரம் குறித்து பேசிய நடிகை அமலா பால் metoo விவரகாரம் ஒரு நல்ல விஷயம் தான். செக்ஸ் தொல்லை பற்றி யாரும் மூடிமறைக்க வேண்டிய விஷயம் அல்ல. இனிமேல் செக்ஸ் தொல்லைகளை கொடுப்பவர்கள் நம்மை கண்டு பயப்படுவார்கள் என்று பேசியுள்ளார்.