நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிமுகமான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதில் ஆடை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை அமலா பால் அரை குறை ஆடையுடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் இருந்தார் அமலா பால்.
தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால், படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் தணிக்கை குழு யூ அல்லது யூஏ சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக ஏ சான்றிதழ் அளிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தினை குடும்ப ரசிகர்கள் பார்க்க முடியாது என்பதால் படக்குழுவினர் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.