தமிழ் சினிமா துறையில் மீடு விவகாரம் தினமும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை என்பவர் பாலியல் புகாரை முன்வைத்துள்ளார். இந்த புகாருக்கு நடிகை அமலா பால் ஆதரவு தெரிவித்ததுடன் இயக்குனர் சுசிகனேசன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.
Breaking : @Amala_ams stands by #LeenaManimekalai‘s sexual harassment allegations against #SusiGanesan, calling him a man with ‘utterly low respect for women’.. She says she also had unpleasant incidents while shooting for TP2.. Bold and frank! pic.twitter.com/vPaRI48tQz
— Kaushik LM (@LMKMovieManiac) October 24, 2018
தமிழில் “விரும்புகிறேன்,கந்தசாமி திருட்டு பயலே ” போன்ற படங்களை இயக்கிய சுசிகனேசன் மீது சென்ற வருடம் கவிஞர் லீனா மணிமேகலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லீனா மணிமேகலைமீது இயக்குனர் சுசி கணேசன் மான நஷ்டயிடு வழக்கையும் தொடுத்துள்ளார்.
இந்நிலையில் சுசிகனேசன் இயக்கிய திருட்டு பயலே 2 படத்தில் நடித்த நடிகை அமலா பால் சுசிகனேசன் திருட்டு பயலே படப்பிடிப்பின் போது தன்னிடம் இரட்டை வசனத்தில் பேசினார் என்றும் காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை உடையவர் என்றும் நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.