அமலாபாலின் காதலர் இவர் தானா ? வைரலாகும் புகைப்படம்.

0
73162
amala-paul
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை அமலாபால். தமிழில் ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், அதன் பின்னர் ஏ எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்து இருந்தார். அப்போது இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் காதல் ஏற்பட்டு இருந்தது. நடிகை அமலாபால் நடிகை அமலாபாலும் ஏஎல் விஜய் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதன் பின்னர் இருவரும் 2017 ஆம் ஆண்டு பிரிந்து சென்றார்கள்

-விளம்பரம்-

இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த ஜூலை 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.

இதையும் பாருங்க : ஒரு கையில் தல டாட்டூ..இன்னொரு கையில் சூடம். விஸ்வாசம் 300 நாள் கொண்டாடத்திற்கு ரசிகை செய்த செயல்..

- Advertisement -

சமீபத்தில் ஆடை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமலாபால், பேசுகையில் தற்போது காதலில் இருப்பதாகவும் அவருடைய பெயரை நான் இப்போது தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆனால், அவர் திரையுலகை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அவர் தனக்கு மிகவும் ஆதரவாக இருந்து வருவதாகவும், அவர் தான் தைரியமான கதாபாத்திரங்களில் தன்னை நடிக்க ஊக்கப்படுத்தியதாகவும் கூறி இருந்தார் அமலா பால். மேலும், திருமணம் குறித்து பேசிய அமலாபால் இப்போதைக்கு திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை என்றும் தற்போது தான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது

இந்த நிலையில் நடிகை அமலா பால் ஆண் நண்பருடன் மிகவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவரது சமூக வலைதள பக்கத்தில் காணப்பட்டது. நடிகை அமலாபால் பிறந்தநாள் கொண்டாட்டத்திலும், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற போதும், இமயமலைக்குச் சென்ற போதும், இந்த நபருடன் இருக்கும் புகைப்படங்களை அமலாபால் பதிவிட்டிருந்தார் மேலும், இமயமலைக்கு அமலாபால் சென்றிருந்த போது அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி இருந்து அமலாபால் மை டியர் இமாலயம் யோகி என்று பதிவிட்டிருந்தார். எனவே, இவர் தான் அமலா பால் காதலிப்பதாக சொன்ன நபரா என்று சமூக வலைதளத்தில் கிசுகிசுக்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement