ஒரு கையில் தல டாட்டூ..இன்னொரு கையில் சூடம். விஸ்வாசம் 300 நாள் கொண்டாடத்திற்கு ரசிகை செய்த செயல்..

0
3812
ajith
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரையுலகின் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டு இருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் இவரை செல்லமாக ‘தல’ என்று தான் அழைப்பார்கள். மேலும், இந்த வருடம் அதாவது 2019 ஆம் ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த “விஸ்வாசம்” படம் வேற லெவல்ல பட்டையை கிளப்பியது என்றும் சொல்லலாம். இந்த படத்தில் தல அஜீத்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் விவேக், யோகி பாபு, அனிக்கா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும், அஜீத் அவர்கள் ஏற்கனவே நடித்து திரையுலகில் வெற்றி நடைபோட்ட வீரம்,வேதாளம், விவேகம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய சிவா அவர்கள் தான் இந்த விஸ்வாசம் படத்தையும் எழுதி, இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், தியாகராஜன் அவர்கள் இந்த படத்தை தயாரித்தும் உள்ளார்கள். இதனை தொடர்ந்து விஸ்வாசம் திரைப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசை அமைத்துள்ளார். மேலும்,இமானின் ஒவ்வொரு பாடலும் தூள் கிளப்பியது கூட சொல்லலாம். அதிலும் “கண்ணான கண்ணே” பாடல் இப்போது வரை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.விஸ்வாசம் படம் முழுக்க முழுக்க ‘அப்பா– மகள்’ சென்டிமென்ட்டை அழகாக காட்டி உள்ளது. இதை தொடர்ந்து அஜித் நடித்த விஸ்வாசம் படம் பொங்கலன்று திரையரங்கிற்கு வெளிவந்தது. மேலும், அஜித் அவர்கள் இந்த படத்தில் மிரட்டலாக நடித்து இருக்கிறார் என்றும், விஸ்வாசம் படம் நல்ல குடும்ப பாங்கான கதை என்றும் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பொங்கலுக்கு வெளியான அனைத்து படங்களின் வசூலையும் விஸ்வாசம் படம் தட்டிச் சென்றது எனவும் கூறி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் வந்த அஜித் நடித்த விஸ்வாசம் படம் ‘பிளாக் பஸ்டர்’ படம் என்று கூட சொல்லலாம்.

இதையும் பாருங்க : அரை போதையா. அரைகுறை ஆடையில் மீரா ஆடிய ஆட்டம். பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மக்களும் விஸ்வாசம் படத்தை பார்த்து பயங்கரமாக கொண்டாடி வந்தார்கள். மேலும், விஸ்வாசம் படத்தை கன்னட மொழியில் கூட டப்பிங் செய்து வெளியிட்டார்கள், அங்கேயும் விஸ்வாசம் படம் மெகா ஹிட் ஆனது. அதோடு அதிக வசூல் வேட்டையை தந்தது. அதுமட்டும் இல்லாமல் கன்னட மொழியில் வந்த தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் விஸ்வாசம் படம் தான் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. இதனை தொடர்ந்து விஸ்வாசம் படத்திற்கான 300ம் நாள் கொண்டாட்டம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும்,விஸ்வாசம் படம் கொண்டாட்டத்தை ரசிகை ஒருவர் சிறப்பாக கொண்டாடி உள்ளார். மேலும், இதைப் பார்த்த ரசிகர்கள் தல அஜித்துக்கு இப்படியும் ஒரு ரசிகையா!!! என வியந்து போய் உள்ளார்கள்.அதோடு சமூக வலைதளங்களில் அந்த ரசிகைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தல அஜித்துக்கு ரசிகர்கள் மட்டும் இல்லைங்க ரசிகைகளும் உள்ளார்கள் என்பது இந்தக் கொண்டாட்டத்தில் தெரிய வந்துள்ளது. மேலும்,இந்த ரசிகை கையில் தல என்று பச்சை குத்தி உள்ளார். மேலும்,அஜித்துக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல ரசிகர்கள், ரசிகைகள் உள்ளன. இது மட்டுமில்லாமல் அஜித் நடிப்பில் “தல 60” என்ற புதிய படம் உருவாகி வருகிறது என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், இதற்கான படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த படத்திற்கு பெயரிட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார் இயக்குனர்.அதோடு நேர்கொண்டபார்வை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூரே இந்த ‘தல 60’ படத்தையும் இயக்க உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement