அமலா பால் காதலளிப்பதாக சொன்ன நபர் இவரா.! வெளியான நெருக்கமான புகைப்படம்.!

0
7209
Amala-paul
- Advertisement -

தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

-விளம்பரம்-
amala-paul

பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : அருகில் அமர்ந்த தர்ஷன் முகம் சுழிக்கும்படி நடந்த மோகன்.! நேத்து இத யாரும் நோட் பண்ணி இருக்கமாடீங்க.! 

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.

சமீபத்தில் கூட நடிகை அமலாபால் நடிகர் விஷ்ணு விஷால் உடன் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த தகவலை இருவருமே மறுத்தனர். இந்த நிலையில் நடிகை அமலா பால் தற்போது ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் ஆடு வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசிய அமலா பால், தற்போது காதலில் இருப்பதாகவும் அவருடைய பெயரை நான் இப்போது தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆனால், அவர் திரையுலகை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், திருமணம் குறித்து பேசிய அமலாபால் இப்போதைக்கு திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை என்றும் தற்போது தான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் நடிகை அமலா பால் ஆணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் வைரலாக பரவி வருகிறது. . எனவே, நடிகை அமலா பால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளபோகும் நபர் இவராக கூட இருக்கலாம் என்று கிசுகிசுக்கபடுகிறத.

Advertisement