திடிரென்று ரசிகருக்கு கிஸ் கொடுத்த அமலா பால். அப்படி என்ன அவர் சொன்னார்னு பாருங்களே. வீடியோ இதோ.

0
2467
amalapaul
- Advertisement -

சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பலர் பாராட்டியும், பலர் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் “அதோ அந்த பறவை போல” என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது நடிகை அமலா பால் அவர்கள் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். மேலும், சமீப காலமாகவே நடிகை அமலா பால் அவர்கள் சமூக வலைத்தளங்களின் “சர்ச்சை நாயகியாக” மாறி விட்டார்.

இதையும் பாருங்க : சத்யா பட கமல் லுக்கில் விஜய் சேதுபதி நடத்திய போட்டோ ஷூட். ஆனால், இந்த கெட்டப்பில் அவர் எந்த படத்திலும் நடிக்கலயே.

- Advertisement -

இந்த நிலையில் ரசிகர் ஒருவருக்கு நடிகை அமலா பால் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அந்த ரசிகர் அமலா பால் நடித்த விஐபி 2 படத்தை நாளை பாருங்க, என்னுடைய சிறந்த நடிகை அமலா பால் என்று கூறுகிறார். அவர் பேசி முடித்ததும் சந்தோஷத்தில் அமலா பால் அந்த ரசிகருக்கு முத்தம் கொடுக்கிறார்.

இந்த வீடியோ ‘வி ஐ பி 2’ படம் வெளியான முந்தைய நாளில் எடுத்தது என்பது போல தான் தெரிகிறது. காரணம், இந்த வீடியோவில் பேசும் அமலா பாலின் ரசிகர், நாளை ‘வி ஐ பி 2’ படத்தை பாருங்க என்று கூறுகிறார். அமலா பால் தனுஷுடன் நடித்த வி ஐ பி படம் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், வி ஐ பி 2 அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement