சத்யா பட கமல் லுக்கில் விஜய் சேதுபதி நடத்திய போட்டோ ஷூட். ஆனால், இந்த கெட்டப்பில் அவர் எந்த படத்திலும் நடிக்கலயே.

0
4298
vijaysethupathi

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விஜய் சேதுபதி. தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். தற்போது இவர் மக்களின் மக்கள் செல்வனாகவே திகழ்ந்து வருகிறார். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வபோது சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல உதவிகளை செய்து வருகிறார்.

இதனாலேயே இவருக்கு குறுகிய காலத்தில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். இவர் 2000-ம் ஆண்டில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

இதையும் பாருங்க : பக்காசனம் செய்து மிரள வைத்த சமந்தா. அது எந்த வகை போஸ்னு பாருங்க.

- Advertisement -

ஜூனியர் ஆர்டிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன் பல குறும்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, கமல் நடிப்பில் வெளியான சத்யா படத்தின் கெட்டப்பில் இருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CB7MkhnCZvM/

ஆனால், இப்படி ஒரு கெட்டப்பை விஜய் சேதுபதி எந்த படத்திலும் தோன்றியது இல்லை. ஒரு வேலை இது வேறு எதாவது படத்திற்கு நடத்தப்பட்ட போட்டோ ஷூட்டா என்றும் தெரியவில்லை. இருப்பினும் இந்த புகைப்படங்களை கண்டு விஜய் சேதுபதி, சத்யா படத்தில் வரும் கமல் போன்றே இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement