தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான விஜய் நேற்று (ஜூன் 29 ) தனது இரண்டாம் திருமணம் குறித்த அறிவிப்பை அறிவித்தார்.
இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. சில வருடங்கள் தொடர்ந்த இவர்களது காதல் பின்னர் 2014 திருமணத்தில் முடிந்தது. திருமணம் நடைபெற்று மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.
இதையும் பாருங்க : கடின உடற் பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்த வித்யூ ராமன்.! பார்த்தா ஷாக் ஆவீங்க.!
ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே போல இயக்குனர் ஏ எல் விஜய்யும் தொடர்ந்து பல படங்களை இயக்கிவருகிறார். தற்போது அமலா பால் ஆடை என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஏ எல் விஜய்யின் இரண்டாம் திருமண அறிவிப்பு சமூக வலைதளத்தில் வெளியான சில நிமிடத்திலேயே நடிகை அமலா பால், தான் நடித்து வரும் ஆடை படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
நான் போராடுவேன், நான் நிலைத்து நிற்பேன், சின்னத்தடையோ பெரிய தடையோ அதில் நான் உயரமாக நின்று நிலைத்து காட்டுவேன். அதை நொறுக்கி தூசியாகி விடுவேன். என்னுடைய பலம்தான் பெரிது நான் சுதந்திரத்தையும் சந்தோஷத்தையும் நம்புகிறேன். இதுதான் நான் இதுதான் என்னுடைய கதை என்று பதிவிட்டுள்ளார்.