‘நைட் என்ன வேணும்னு காமிக்கிறா’ போதையில் ஆடிய அமலா பாலுக்கு வந்த Dirty கமன்ட் – அவரின் ஷாக்கிங் பதிலை பாருங்க.

0
5608
amala
- Advertisement -

மலையாள சினிமா துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு எத்தனையோ நடிகைகள் காலடி எடுத்து வைத்து பிரபலம் அடைந்துள்ளனர். நயன்தாரா, பாவனா, மாளவிகா மோஹனன் என்று பல நடிகைகள் மலையாளத்தில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் கேரள நாட்டில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கவர்ச்சி புயலாக நுழைந்தவர் நடிகை அமலா பால். சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாகவும் உள்ளார்.

-விளம்பரம்-

இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா என பல படத்தில் நடித்து உள்ளார். இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : விக்ராந்தின் சர்வைவர் நிகழ்ச்சியால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் இருந்து நீக்கப்பட்டாரா லட்சுமி ?

- Advertisement -

ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு ஆண்டு கூட பூர்த்தியாக முடிந்திருக்காது பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இடையில் இவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின்னர் பாடகர் ஒருவருடன் அமலா பாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது என்று கூட புகைப்படங்கள் வெளியானது.

ஆனால், அது வெறும் போட்டோ ஷூட் தான் என்று கூறி இருந்தார் அமலா பால். தற்போது நடிகை அமலா பால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோவில் கையில் மது பாட்டிலுடன் நடமாடிய அமலை பாலிற்கு பல விதமான கமெண்டுகள் எழுந்தது.

அதில் ஒரு இன்ஸ்டா வாசி ‘இவர் இப்படி ஆட்டுவது, இவருக்கு இரவில் என்ன வேண்டும் என்பதை காட்டுகிறது ‘ என்று இரட்டை அர்த்தத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அமலா பால். சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

Advertisement