ரோகினிக்கு முன்பே பிரபல நடிகையிடம் காதலை சொல்லியுள்ள ரகுவரன் – கடைசியில் ஸ்டார் நடிகருக்கு இரண்டாம் மனைவியான கதை.

0
1409
raghuvaran
- Advertisement -

நடிகர் ரகுவரன் காதலை சொல்லியும் அதை தான் மறைத்துவிட்டதாக பிரபல நடிகை கூறி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மறைந்த நடிகர் ரகுவரன் ஹீரோ,வில்லன்,குணச்சித்திர நடிகரேன பல வேடங்களில் நடித்துள்ளார். இவர் எந்த பாத்திரமாக நடித்தாலும் அதில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கூடிய ஒரு சிறந்த கலைஞசர். மேலும் தமிழில் முன்னணி நடிகர்களான கமலை தவிர்த்து மற்ற அணைத்து நடிகர்களுடனும் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமா,ர் கார்த்தி என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ரகுவரன். ரகுவரன் கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார்.நடிகை ரோகிணியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக தான் திகழ்ந்து வந்தார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தையும் பிறந்தது.

- Advertisement -

ரகுவரன் – ரோகிணி :

ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். ரகுவரன் மற்றும் ரோகிணி பிரிந்த நான்கு வருடங்களில் நடிகர் ரகுவரன் கவனிக்க ஆளில்லாமல் தனியாகத்தான் வசித்து வந்தார். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிர் பிரிந்தார். ஆனால், ரோகினிக்கு முன்பே ரகுவரன் வேறு ஒரு நடிகையை காதலித்து இருகிறார். அது வேறு யாரும் இல்லை பிரபல நடிகை அமலா தான்.

30 ஆண்டுக்கு பின் தமிழில் அமலா :

அமலா அறிமுகமானது தமிழில். அவர் தமிழில் நடிப்பதை நிறுத்தி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு அவர் நடித்திருக்கும் தமிழ்ப்படம் கணம் வெளியாகியிருக்கிறது. கணம் தெலுங்கு, தமிழ் இருமொழிகளில் தயாரானப் படம். இப்படி ஒரு நிலையில் இன்று அமலாவின் பிறந்தநால். கணம் வெளியானதை முன்னிட்டு தமிழ் ஊடகங்கள் சிலவற்றிற்கு பேட்டியளித்த அமலா ரகுவரன் குறித்து காதல் கதையை கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

ரகுவரனுக்கு ஜோடியாக நடித்த படம் :

டி ஆர் இயக்கத்தில் மைதிலி என்னை காதலி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அமைவர். 1987 இல் ரஜினியுடன் வேலைக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் அமலா முன்னணி நடிகையானார். வேதம் புதிது, இது ஒரு தொடர்கதை,, கூட்டுப் புழுக்கள், பேசும் படம் ஆகியவை அந்த வருடம் வெளியான படங்களில் சில. இதில் கூட்டுப் புழுக்கள் படத்தில் ரகுவரன் ஜோடியாக நடித்திருந்தார்.கூட்டுக் குடித்தனங்கள் மிகுந்த ஒரு குடியிருப்பை மையப்படுத்தி ஆர்.சி.சக்தி கூட்டுப் புழுக்கள் படத்தை எடுத்திருந்தார்.

காதலை நிராகரித்த அமலா :

குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள், பாலியல் வேட்கை, வறுமை, சாதி, வர்க்கமுரண் என்று அனைத்தையும் பேசிய படம் அன்று விமர்சனரீதியாக பாராட்டப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த போது ரகுவரன் அமலாவை காதலிக்க ஆரம்பித்தார். ஒருதலைக் காதல்தான். தனது காதலை அவர் அமலாவிடம் கூறிய போது அமலா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் தோல்வி ரகுவரை மன அழுத்தத்தில் தள்ளியது. இதனை அவரே பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

நாகர்ஜுனா முதல் மற்றும் இரண்டாம் மனைவிகள்

நாகர்ஜுனாவிற்க்கு இரண்டாம் தாரம் :

1992-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா. இவர்களுடைய மகன் தான் இப்போது பிரபல ஹீரோவாக தெலுங்கு திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் அகில். நாகர்ஜுனாவின் இரண்டாவது மனைவி தான் அமலா என்பது குறிப்பிடத்தக்கது. நாகர்ஜுனாவின் மூத்த மனைவி லக்ஷ்மியின் மகன் தான் நடிகர் நாகசைத்தன்யா என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ரகுவரனின் காதலை நிராகரித்த அமலா, நாகர்ஜுனாவின் இரண்டாம் மனைவியாக மாறி இருக்கிறார்.

Advertisement