லோன் போட்டு தான் அமரன் படத்தில் நடித்தேன், ஏன்னா- மனம் திறந்து நடிகர் லல்லு சொன்னது

0
243
- Advertisement -

அமரன் படம் குறித்து நடிகர் லல்லு அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை. தீபாவளிக்கு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருக்கிறது.

- Advertisement -

நடிகர் லல்லு பேட்டி:

மேலும், இந்த படத்தில் ஆர்மி மேனாக ரவிசங்கர் என்ற கதாபாத்திரத்தில் லல்லு என்பவர் நடித்திருப்பார். குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் முகுந்த் வரதராஜன், ரவிசங்கரிடம் சொல்லி இருக்கும் விஷயம் பலரையுமே கண்கலங்க வைத்தது. இந்த படத்தில் லல்லு நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் லல்லு, படம் எல்லோருக்குமே ரொம்ப பர்சனல் ஆக இருந்ததாக சொல்கிறார்கள். இதுவரை வந்த ராணுவ படங்களை விட அமரன் முற்றிலுமே வேறு ஒரு பக்கத்தை பேசுகிறது. எல்லோருக்குமே இந்த படம் பிடித்திருக்கிறது.

சினிமா வாய்ப்பு:

முகுந்த் வரதராஜனுக்கு இந்த படம் ஒரு நல்ல ரிபூயூட் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த படத்தை பார்த்து பலருமே என்னை பாராட்டி இருந்தார்கள். அது எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்த படத்தின் மூலம் நான் மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்னுடைய குறும்படத்தை பார்த்து தான் ரங்கூன் படத்தில் நடிக்க கூப்பிட்டார். அதற்குப் பிறகு அமரன் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

-விளம்பரம்-

அமரன் வாய்ப்பு:

கோவிட் நேரத்தில் மொத்தமாகவே நான் ஊருக்கு போய் விட்டேன். சுத்தமாக எந்த ஒரு வருமானம் இல்லை. மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று வரும்போது என்னுடைய கேரியரை முதலில் இருந்து தொடங்கினேன். என்ன பண்ணுவது என்று புரியாமல் இருந்தபோதுதான் ராஜ்குமார் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காஷ்மீரில் நடிக்கணும், அதற்கு தேவையானதெல்லாம் எடுத்துக் கொண்டு வா என்றெல்லாம் சொன்னார். உடனே நான் லோன் போட்டு நடிக்க போறேன்.

சிவகார்த்திகேயன் குறித்து சொன்னது:

எல்லோருமே படிக்க லோன் போடுவார்கள். நான் நடிப்பதற்காக லோன் வாங்கினேன். காரணம், சரியான பொருளாதார நிலை இல்லை. அந்த நிலைமையில் தான் நான் அமரன் படத்திற்கு போனேன். இன்னைக்கு என்னுடைய கேரியரை திரும்பவும் இந்த படம் தொடங்கி வைத்திருக்கிறது. படத்தில் சிவகார்த்திகேயன் சார் முகுந்த் ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். இந்த படத்திற்கு அவர் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார். இந்த படத்தின் மூலமாக எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லி பாராட்டி இருந்தார் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement