இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இந்த நோய் தொற்றினால் பல லட்சம் பேர் பாதிக்கப்ட்டு வருகின்றனர். கொரோனாவில் இருந்து மக்களை காக்க மருத்துவர்கள் செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் என்று பல ஆயிரம் பேர் தன்னலம் பார்க்காமல் நோயாளிகளுக்கு சேவை செய்து வருகின்றனர்.

அதே போல அரசும் இவர்களை முன்கள பணியாளர்களாக கருதி பல்வேறு சலுகைகளை வழங்கி இவர்களின் சேவையை பாராட்டியும் வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர் போல பல ஆம்புலஸ் ஓட்டுநர்களும் இரவு பகல் பாராமல் சேவை செய்து வரும் நிலையில் தெலுங்கானாவில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செய்துள்ள விஷயம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

இதையும் பாருங்க : என்ன சிம்ரன் இதெல்லாம் – ரைசாவிடம் இருந்து இப்படி ஒரு போஸை சற்றும் எதிர் பாராத ரசிகர்கள்.

Advertisement

தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் திடீரென ஆக்ஸிஜன் பைப்லைனில் இருந்து ஆக்ஸிஜன் வராமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பின்னர் என்னவென்று சரி பார்த்த போது ஆக்சிஜன் சப்ளை செய்யும் அறையில் ஆக்ஸிஜன் பைப்லைன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இந்த வேலையை யார் செய்து இருப்பார் என்று ஆராய்ந்த போது மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலர் தான் ஆக்சிஜன் சப்ளையை துண்டித்து இருப்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் 3 பேரை கைது விசாரித்ததில், கடந்த 2, 3 நாட்களாக மருத்துவமனையில் யாரும் சாகவில்லை. அதனால் அம்புலன்சுக்கு வேலை இல்லாமல் இருந்தது. இதனால் நாங்கள் காசு இல்லாமல் தவித்தேம். அதனால் அப்படி செய்தோம் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் கூறியதை கேட்டுபோலீசார் அதிர்ந்து போனார்கள். பின்னர் சம்பந்தபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement