என்ன சிம்ரன் இதெல்லாம் – ரைசாவிடம் இருந்து இப்படி ஒரு போஸை சற்றும் எதிர் பாராத ரசிகர்கள்.

0
3822
raiza
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் 4 சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசன் மூலம் பல்வேறு நபர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள் அந்த வகையில் நடிகை ரைசாவும் ஒருவர். நடிகை ரைசா வில்சன் பெங்களூரை சார்ந்தவர். மேலும், ரைசா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர்.

-விளம்பரம்-

அதற்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து இவர் பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார். ரைசா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார். 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : டெபாசிட் கூட வாங்கல, எதுக்கு இந்த சீன் ? போய் பிச்ச எடுத்து பொழைக்கலாம்லா – கேலி செய்தவருக்கு கேப்டன் மகன் கொடுத்த பதிலடி.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அடிக்கடி எதாவது பதிவிட்டு சிக்கலில் சிக்கிவிடுகிறார். சமீபத்தில் கூட பேஷியல் சென்ற இடத்தில் விபரீதம் ஏற்பட்டு ரைசாவின் முகம் அலங்கோலமானது. இது குறித்து பைரவி செந்தில் மீது ரைசா மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதே போல பதிலுக்கு பைரவி செந்திலும் ரைசாவிடம் நஷ்டயீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்த விவகாரம் கொஞ்சம் நாட்கள் ஓட சமீபத்தில் தான் ரைசாவின் முகம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியது. @charissma beauty_clinic க்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு பழைய நிலைமைக்கு திரும்பதியதாக கூறி இருந்தார் ரைசா. சமீபகாலமாக எந்த ஒரு கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடாமல் இருந்த ரைசா தற்போது முதல் முறையாக இதுவரை இல்லாத படுகவர்ச்சியான உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் இருக்கும் ரைசாவை கண்டு என்ன சிம்ரன் இதெல்லாம் என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளார்கள்

-விளம்பரம்-
Advertisement