இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 979 பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். 25 பேர் உயிரிழந்துள்ளார்கள். கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம்,காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் போராடி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் கடந்த ஞாயிற்று கிழமை 5 மணிக்கு பிரதமர் மோடி மருத்துவர்களின் சேவையை பாராட்டி கைத்தட்ட சொல்லியிருந்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மருத்துவர்கள் தீவிர சோதனை எடுத்து வருகிறார்கள். இரவு பகல் பார்க்காமல், நேரம் பார்க்காமல், தங்களுடைய குடும்பங்களையும் நினைக்காமல், தங்களுடைய உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் ஒவ்வொருவரும் போராடி வருகின்றனர். மேலும், டாக்டர்கள் செவிலியர்கள் போலவே ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாடு பட்டு தான் வருகின்றனர்.

Advertisement

ஆனால், அவர்களை பற்றி யாரும் பேசுவது இல்லை. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரின் தாய், தனது மகனுக்கு போன் செய்து அந்த வேலை வேண்டாம் வந்து விடு என்று கதறி அழும் ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாண்டி துறை என்பவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

கொரோனா தோற்று காரணத்தால் பொது மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பாண்டித்துரையின் பெற்றோர்கள் எங்கே தனது மகனுக்கு தொற்று வந்துவிடுமோ என்று அச்சத்தால் மகனுக்கு போன் செய்து கதறி அழுந்துளளர். அந்த ஆடியோவில், பேசியுள்ள பாண்டித்துரையின் தந்தை உன்னை பிச்சை எடுத்தாவது காப்டருக்கிறேன் வா என்று கூறுகிறார்.

Advertisement

Advertisement

மேலும், அவரது தாயும் தயவு செய்து வீட்டிற்கு வந்து விடு என்று கண்ணீர்விட்டு அழுகிறார். ஆனால், தனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறும் பாண்டித்துரை இந்த வேலையை விரும்பி தான் வந்தேன். இதெல்லாம் ஒரு புண்ணியம் தான். என்னை போல அனைவரும் வந்துவிட்டால் யார் தான் செய்வார்கள். கடவுளை கும்பிடுங்கள் என்று கூறியுள்ளார் பாண்டி. இந்த ஆடியோ பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement