தன் தாய், தந்தையர் வாழ்ந்த வீட்டை பல கோடிகளில் விற்று இருக்கிறார் அமிதாப்பச்சன். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் அன்றும் இன்றும் என்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்பவர் என்று சொல்லலாம். இவர் 1970 களில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக கருதப்பட்டார். இவருடைய நடிப்பு திறமைக்கு தேசிய விருது, பிலிம்பேர் என பல விருதுகளை வாங்கினார்.
மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகம் கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பாராளுமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மேலும், இவர் நடிகை ஜெயபாதூரியை திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு ஸ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.
அமிதாபச்சன் குடும்பம்:
இவர் உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு மகள் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, அமிதாபச்சன் அவர்களுக்கு மும்பையில் பல்வேறு பகுதிகளில் சொந்த பங்களாக்கள் உள்ளன. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் தங்கியிருக்கும் வீடு மட்டுமே 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் பரப்பளவு கொண்டது. அந்தளவிற்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டி இருக்கிறார். இவர் மும்பையில் வைத்திருக்கும் பல வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறார். சமீபத்தில் கூட பிரபல நடிகைக்கு அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28வது மாடியில் உள்ள டூப்ளக்ஸ் வீட்டை வாடகைக்கு விட்டு இருக்கிறார்.
மும்பையில் இருக்கும் அமிதாபச்சன் வீடுகள்:
அவர் வேற யாரும் இல்லைங்க, பிரபல ஹிந்தி நடிகை கீர்த்தி சனானுக்கு தான் நடிகர் அமிதாப்பச்சன் வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு இருக்க நடிகை கீர்த்தி சனான் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதற்காக அட்வான்ஸ் தொகையை 60 லட்சமும், மாதம் வாடகை 10 லட்சம் வழங்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் போடப்பட்டு இருந்தது. இதற்கு நடிகை கீர்த்தி சனான் சம்மதித்து குடியேறி இருக்கிறார். நடிகை கீர்த்தி சனான் ஹிந்தியில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர். இவர் தில்வாலே, க்ளாங்க், வலம் கி பார்ஃபி, ஹவுஸ்புல் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
டெல்லியில் உள்ள அமிதாபச்சன் வீடு:
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ” மிமி ” படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நடிகர் அமிதாப்பச்சன் ஜூஹுவில் உள்ள தனது இடத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகை கொடுத்துள்ளாராம். அந்த இடத்திற்கு 15 வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம். இப்படி தன்னுடைய இடங்களை அமிதாப்பச்சன் வாடகைக்கு விட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது அமிதாப்பச்சன் டெல்லியில் இருக்கும் தன்னுடைய சொந்த வீட்டை விற்றிருக்கிறார்.
அமிதாபச்சன் வீட்டை விற்ற காரணம்:
அமிதாப்பச்சனுக்கு டெல்லியில் சொந்த வீடு இருக்கிறது. அந்த வீட்டில் இவருடைய பெற்றோர்கள் வாழ்ந்து வந்தார்கள். தற்போது அந்த வீட்டில் யாரும் வசிப்பதில்லை. இதனால் அமிதாபச்சன் தன்னுடைய குடும்ப நண்பர் ஒருவருக்கு இந்த வீட்டை விற்பனை செய்திருக்கிறார். அதுவும் இந்த வீட்டை 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார். இந்த வீடு 418.05 சதுர மீட்டர் கொண்டது. இவ்வளவு பிரம்மாண்டமான வீட்டை மார்க்கெட் விலை அளவுக்கு அமிதாபட்சன் விற்பனை செய்து இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இதுகுறித்து ரியல் எஸ்டேட் வள்ளுவர் ஒருவரிடம் விசாரித்தபோது அவரும் இது தான் மார்க்கெட் விலை என்று கூறியிருக்கிறார். இப்படி அமிதாபச்சன் வீடு விற்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.