வலிமை படத்தில் நடித்துள்ள இந்த நடிகை யார் தெரியுமா? 90ஸ் கிட்ஸ்க்கு நல்லா தெரியுமே.

0
5111
valimai
- Advertisement -

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் இது நாள் வரை வரவில்லை. நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.

-விளம்பரம்-
Amman Movie Child Artist Sunanina Husband And Son

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதுவும் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் 25 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது.

இதையும் பாருங்க : சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு வாழ்த்து சொன்ன சனம் – சூர்யாவின் உருவத்தை கேலி செய்தவருக்கு கொடுத்த செருப்படி பதில்.

- Advertisement -

இந்த படத்தில் ஹுமா குரேஷி, புகழ், கார்த்திகேயா, யோகி பாபு என்று பலர் நடித்து இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் 90 ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரிட்சயமான குழந்தை நட்சத்திரம் ஒருவர் நடித்துள்ளார். அது வேறு யாரும் இல்லை நடிகை சுனைனா பாதாம் தான். 90ஸ் கால கட்டத்தில் சாமி படங்களுக்கு முன்னோடியாக இருந்த அம்மன் படத்தில் நடித்த இந்த குழந்தையை யாரும் மறந்திருக்க முடியாது

அம்மன் படத்தை தொடர்ந்து இவர் குறுகிய வருடங்களிலேயே தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஆனால், தெலுங்கில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘பாலா ராமாயணம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் சமந்தா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஓ பேபி’ படத்தில் ராஜேந்திர பிரசாத் மகளாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement