சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு வாழ்த்து சொன்ன சனம் – சூர்யாவின் உருவத்தை கேலி செய்தவருக்கு கொடுத்த செருப்படி பதில்.

0
2911
sanam
- Advertisement -

சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன சனம் ஷெட்டியின் பதிவில் சூர்யாவின் உயரம் குறித்து விமர்சனம் செய்த ரசிகர்களுக்கு சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது தம்பி கார்த்திக்கும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர்களது அப்பா சிவகுமார் ஒரு நடிகர். சூர்யாவின் மனைவியான ஜோதிகா ஒரு நடிகை என்று இவர்களது குடும்பமே கலை குடும்பம் தான். என்னதான் சூர்யா, பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்றாலும் தன்னுடைய தனித்திறமையால் தான் இன்று தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென்ற ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் மல்டி ஹீரோ சப்ஜெக்டில் நடித்த சூர்யா பின்னர் படிப்படியாக லீட் ரோலில் நடிக்கத்துவங்கினார். ஆனால், இவருக்கு நந்தா திரைப்படத்திற்கு பின்னர் தான் ஒரு பிரேக்கே கிடைத்தது. மேலும், சூர்யாவிற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருந்தாலும் மற்ற நடிகர்களை போல இவரை வெறுக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இதையும் பாருங்க : 20 கிலோ குறைத்தும் உருவத்தை கேலி செய்த ரசிகர்கள் – தரமான பதிலடி கொடுத்த வித்யூலேகா.

- Advertisement -

இன்று சூர்யா தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் சூர்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சனம் ஷெட்டி , சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இதற்கு விஜய் ரசிகர் ஒருவர், சூர்யாவவிட சனம் ஹைட்டு என்று கேலி செய்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த சனம், ஹைட்ல என்ன இருக்கு பிரதர், அவங்க டேலன்ட் தான் வெய்ட்டு என்று செருப்படி பதில் கொடுத்துள்ளார். நடிகர் சூர்யாவின் ஹேட்டர்ஸ்கள் எல்லாமே அவரின் உயரத்தை வைத்து தான் கேலி செய்து வருகின்றனர். இதற்கு பல படங்களில் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் சூர்யா. உதாரணதிற்கு ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நாம எவ்ளோ உயரம்னு முக்கியமில்லா, எவ்வளவு உயருகிறோம் என்பது தான் முக்கியம் என்று கூறி இருப்பார்.

-விளம்பரம்-
Advertisement