தனது குழந்தையுடன் இருக்கும் குயூட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி. இதன் அவர் பெயராம்.

0
62014
amy-jackson

ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் ஹாலிவுட் மாடலும் நடிகையுமான எமி ஜாக்சன். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது.

View this post on Instagram

Light of my life ❤️

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார்.

இதையும் பாருங்க : காதல்,சுப்ரமணியபுரம் படங்களில் நடிக்க வேண்டியது இந்த நடிகர் தானாம். அவரே சொன்ன தகவல்.

- Advertisement -

கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வரும் எமி சமீபத்தில் தனது வயற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என்று வீடியோ ஒன்றை கூட பதிவிட்டிருந்தார். கடந்த மாதம் நடிகை எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. மேலும், அக் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

அதே போல குழந்தை பிறந்த பின்பும் எமி ஜாக்சன் சற்றும் குறையாமல் அதே அழகுடன் இருக்கிறார். இந்த நிலையில் தனது மகன் பிறந்து ஒரு மாதம் ஆன நிலையில் நடிகை எமி ஜாக்சன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், குழந்தையின் கையை பிடித்தவாறு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் எமி. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement