தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்தாரா விஜய் ? உண்மை இதோ ! வைரலாகும் வீடியோ

0
2480
Actor vijay
- Advertisement -

இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள போராட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் காலை முதல் நடைபெற்றுவருகின்றது.இதில் முன்னனி நடிகர்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன்,கமல் மற்றும் ரஜினி ஆகிய நடிகர்கள் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த போராட்டத்திற்கு காலையிலேயே முதல் ஆளாக தமிழ்திரையுலகின் இளையதளபதி விஜய் வந்துவிட்டார்.இன்று காலை போராட்டம் தொடங்கும் முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதில் நடிகர் விஜய் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர்.ஆனால் விஜயை புடிக்காத விஷமிகள் சிலர் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜய் எழுந்து நிற்கவில்லையென எடிட் செய்த வீடியோ கிளிப்பிங்கை சமூகவலைத்தளங்களில் பரப்பினர். உண்மை என்னவென அறியாத பலரும் அது உண்மையென நம்பி சேர் செய்து வந்தனர். சிலர் விஜயை திட்டியும் பதிவிட்டுள்ளனர்.

ஆனால் உண்மையில் இன்று காலை போராட்டம் தொடங்கும் முன்னர் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படும் போது இளையதளபதி விஜய் எழுந்து நின்றார்.
இதோ அந்த எடிட் செய்யப்படாத ஒரிஜினல் வீடியோ உங்களுக்காக,

-விளம்பரம்-
Advertisement