படத்துல தான் அவர் கெத்து நிஜத்துல வெத்து, பயந்தாங்கோலி – ரவுடி என்று அழைக்கப்படும் விஜய்தேவர்கொண்டாவை கேலி செய்த அவரின் ஹீரோயின்.

0
559
vijaydevarakonda
- Advertisement -

‘திரையில் தான் அவர் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கோளி’ என பிரபல நடிகை ஒருவர் விஜய தேர்கொண்டாவை கேலி செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர். ஆனால், இவர் தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்ற “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடுகிறது. கடைசியாக இவர் “நோட்டா “என்ற தமிழ் படத்தில் நடித்து உள்ளார்.

- Advertisement -

liger படம் பற்றிய தகவல்:

இப்படி விஜய் தேவர்கொண்டா அவர்கள் சினிமா உலகிற்கு வந்த குறுகிய நாளிலேயே இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். தற்போது இவர் ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் ‘liger’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இவரே தயாரித்தும் வருகிறார். மேலும், விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லிகர் படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்குகிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.

விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படம்:

இந்த படமானது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது. மேலும், இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படம் வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் சமந்தா குத்தாட்டம் போட இருக்கிறார். சமந்தா- விஜய் தேவர்கொண்டாவின் குத்துப்பாடலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், இந்த படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

-விளம்பரம்-

விஜய் தேவர்கொண்டாவை விமர்சித்த நடிகை:

இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் அதிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அனன்யா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் விஜய் தேவர்கொண்டா குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, திரைப்படங்களில் விஜய் தேவர்கொண்டா தைரியசாலியாகவும், முரடனாகவும் நடிக்கிறார். ஆனால், நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கோலி. அளவோடுதான் எல்லோரிடமும் பேசுவார்.

அனன்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்:

அவர் உண்டு அவர் வேலை உண்டு என அமைதியாக இருப்பார். நடிப்பில் அவரிடம் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கிடைத்தாலும் சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜ வாழ்க்கையில் காட்டுவதில்லை என்று அனன்யா விமர்சித்துப் பேசி இருக்கிறார். இப்படி விஜய் தேவர்கொண்டாவை பயந்தாங்கோளி என பேசிய அனன்யா பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் கொந்தளித்து அனன்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு விஜய் தேவர்கொண்டா தரப்பில் என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement