கான் திரைப்பட விழாவில் முதன் முதலாக இந்திய நடிகைக்கு விருது கிடைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் உலகளாவிய திரைப்பட விழாக்களில் இந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டில் 77-வது கான் திரைப்பட விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பல இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அதில் ‘சன்பிளவர்ஸ்’ என்ற இந்திய குறும்படம் முதல் இடத்தை பிடித்து விருது வாங்கியிருக்கிறது. இந்த படத்தை சித்தானந்த் எஸ் நாயக் என்பவர் இயக்குகிறார். மேலும், இந்த விழாவில் முதல் முறையாக இந்திய நடிகை ஒருவருக்கு விருது கிடைத்து இருக்கிறது.

Advertisement

கான் திரைப்பட விழா:

அவர் வேறு யாரும் இல்லை, நடிகை அனுசுயா செங்குப்தா. கான் திரைப்பட விழாவில் முதன் முதலாக விருது பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை இவருக்கே போய் சேரும். இவர் ‘தி ஷேம்லஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தான் இவருக்கு சிறந்த நடிகை என்ற விருது கான் விழாவில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கான்ஸ்டான்டின் போஜோனோவ் என்பவர் இயக்கியிருந்தார்.

அனுசுயா குறித்த தகவல்:

நடிகை அனுசுயா மும்பையில் புரொடக்ஷன் டிசைனராக வேலை செய்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் மட்டும் நடித்து வந்தார். அதற்குப் பிறகுதான் தி ஷேம்லஸ் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இந்த படத்தின் மூலம் இவருக்கு ஒரு நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது. இவருக்கு கான் விழாவில் விருதை கிடைத்திருப்பதை அடுத்து இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.

Advertisement

விழாவில் கொடுக்கப்பட்ட மற்ற விருது:

மேலும், இந்த கான் விழாவில் இரண்டாவது பெரிய விருதான கிராண்ட் ஃபிக்ஸ் விருதை All We Imagine as Light என்ற திரைப்படம் வென்று இருக்கிறது. இந்த படத்தை பாயல் கப்பாடியா என்பவர் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் வேலை செய்ய இடம் பெயர்ந்த பெண்களின் கதையை இந்த படம் பேசுகிறது.

Advertisement
Advertisement