தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டியல் இனப்பெண்  சமைத்த உணவை என் உள்ள மாணவர்கள் சாப்பிட மறுத்த நிகழ்ச்சி ஓம் சக்தி ஏற்படுத்தியது இது குறித்து கருத்து தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாணவர்களின் நெஞ்சங்களில் நெஞ்சில் கலக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தார். இந்த நிகழ்விற்கு பின் தூத்துக்குடி மாவட்டத்தின் எம்பி ஆன கனிமொழியும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கீதா ஜீவனும் அங்கு போய் உணவு உட்கொண்டனர்.

அன்புமணி அறிக்கை:

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பட்டியலின பெண் சமைத்து உணவு உட்கொள்ள மாணவர்கள் மறுப்பதாக வெளியாக செய்திகள் மிகவும் வேதனை அளிக்கின்றது. சாதிகளில் இல்லையடி பாப்பா என்ற பாடிய பாரதியார் பிறந்த மண்ணில் உணவில் கூட தீண்டாமை கடைபிடிப்பது ஏற்றுக்கொள்ள  முடியாது. தமிழ்நாடு முழுவதும் அண்மையில் உருவாக்கப்பட்ட காலை உணவு திட்டத்தில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்தப் பள்ளியில் முனிய செல்வி என்ற பட்டியல் இனப்பெண் சமையலராக பணியாற்றி வருகிறார் அவர் சமைத்த உணவை தங்கள் பிள்ளைகள் சாப்பிட மறுக்கிறார்கள். அப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் அழுத்ததை தொடர்ந்து அப்பள்ளியில் பெரும்பான்மை பிள்ளையை காலை உணவை உண்ணாமல் தவிர்த்து வந்துள்ளனர். உணவை சமைத்த பெண் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த உணவு சாப்பிடக்கூடாது என்று குழந்தைகளை தடுப்பது மிக கொடிய தீண்டாமை குற்றம் ஆகும். இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

பொதுவாகவே குழந்தைகளின் மனம்  கள்ளகபடம் அற்றது உசிலம்பட்டி பள்ளியில் மாணவ மாணவியருக்கும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்தப் பட்டியலின் சமைத்த உணவை சாப்பிடுவதற்கு அங்குள்ள மாணவர்கள் தயாராக இருந்துள்ளனர் பல குழந்தைகள் அதை உண்டு சுவையாக இருக்கிறது என்றும் கூறினர். ஆனால் குழந்தைகளின் பெற்றோர் கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த உணவை குழந்தைகள் உண்ண  மறுக்கின்றனர். பட்டியலின பெண் சமைத்தார் என்பதற்காக மாணவர்கள் உணவைப் புறக்கணிப்பதும் அவ்வாறு செய்ய அவர்களை அவர்கள் பெற்றோர் தூண்டுவதும் இப்போதுதான் முதன் முதலில் நடக்கும் நிகழ்வு அல்ல ஏற்கனவே பல இடங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன.

Advertisement

இவை எதிலுமே மாணவர்கள் தொடர்பு கிடையாது பெற்றோரும்  அங்கு சுற்றி இருப்பவர்களும் இதற்குக் காரணம். மாணவர்கள் பயிலும் நூலின் முதல் பக்கத்திலே அவர்கள்  படிக்கும் முதல் சொற்தொடரே தீண்டாமை ஒரு பாவம் செயல் தீண்டாமை ஒரு பெரும் குற்றம் தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் என்பது தான். அத்தகைய குழந்தைகள் பட்டியில் நடந்த சமைத்த உணவு உண்ணக்கூடாது என்று தடுப்பது பிஞ்சு நெஞ்சம்களில் நஞ்சு  கலக்கும் செயலாகும். சாதியின் பெயரால் ஒரு பிரிவினரை ஒதுக்க வைக்கும் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடிய காலத்திலிருந்து நாம் விலகி வெகு தூரம் பயணம் செய்து வந்து விட்டோம்.

Advertisement

சமத்துவ சமுதாயம் என்று இலக்கை நோக்கி நாம் பயணித்து வருகிறோம். நிலத்தில் நெல்லை நடவு செய்வதில் தொடங்கி அறுவடை செய்வது வரை அவர்களின் அழைப்பு உள்ளது காய்கறிகள் விற்பனையிலும். பால் உற்பத்தியிலும் அவர்களின் பங்கு இருக்கின்றது எனவே அவர்கள் சமைத்த கூடாது என்று குழந்தைகளை தடுப்பது தவறு ஏதேனும் நியாயப்படுத்த முடியாதது. எனது உணவில் தீண்டாமை போன்ற குற்றங்கள் குறித்து மக்களிடதிலும் மாணவர்கள் இடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அனைவரும் சமம் என்ற உணர்வு ஏற்படுத்த வேண்டும் கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பட்டியல் மக்களை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement