பேட்டியின் போது நடந்தது இது தான்..!ரஜினியை பேட்டி எடுத்த அர்ச்சனா சுவாரசிய தகவல்..!

0
376
Archana

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் நடிகர் ரஜினியின் பேட்டி நாளை (6/11/18) ஒளிபரப்பாக இருக்கிறது. விரைவில் `2.0′ ரிலீஸாக இருக்கிற சூழலில் ஜீ தமிழ் சேனலுக்கு ரஜினியை ஒன் டூ ஒன் பேட்டி கண்டுள்ளார் தொகுப்பாளினி அர்ச்சனா.

Archana

`2.0′ படம் பற்றிய தகவல்களைத் தாண்டி, மற்ற பொதுவான கேள்விகளுக்கும் உற்சாகத்துடன் பதிலளித்து, ரஜினி பேசியிருக்கிற அந்தப் பேட்டி நாளை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிற சூழலில் அர்ச்சனா, ரஜினியை பேட்டி எடுத்த போது நடந்த சில சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், சென்னை கடற்கரையில இருக்கிற நட்சத்திர ஓட்டல். குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியா வந்து நிற்கிறார். பேட்டி எடுக்கப் போறது நான்தான்கிறது ஸ்பாட்டுக்கு வந்த பிறகே அவருக்குத் தெரியுது. பேட்டி ஆரம்பிச்ச இருபது நிமிஷம் `2.0’ படம் குறித்துப் பேசினோம்.

பிறகுதான் பேட்டியோட பரபரப்பு, விறுவிறுப்பு தொடங்குச்சு. பல அரசியல் கேள்விகளுக்கு உற்சாகமாகவும், ஜாலி மூட்லயும் அவர் தந்த பதில்கள் ஒண்ணு ஒண்ணும் வேற லெவல். சரியா ஒரு மணி நேரம் இருபது நிமிஷம் போச்சு. அந்த வாவ் சிரிப்பு, கேள்வியில் அவர் தந்த ட்விஸ்ட் எல்லாத்தையும் வார்த்தைகளால விவரிக்க முடியாது.பேட்டி முடிஞ்சதும், `கட்டிப்பிடிச்சு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா’ன்னு கேட்டு, அந்த க்ளிக்கும் கிடைச்சது.