என்னோட குரல் அப்படி ஆக சிவகார்த்திகேயன் தான் காரணம் ! தொகுப்பாளினி பாவனா

0
642
sivakarthikeyan Actor

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒரு காமெடியனாக தனது பயணத்தை தொடங்கி பின்னர் நிரந்தர தொகுப்பாளராக பல ஆண்டுகள் இருந்து வந்தார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது அவர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை என்றும் கூறலாம்.
மேலும் சிவா தனியாக ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது , அதுவும் அவருடன் ஒரு பெண் தொகுபாலிணி சேர்ந்துவிட்டால் அவ்வளவு தான் அவர்களை சிவா கதற கதற கலாய்த்து விடுவார்.

bhavana-balakrishnan

அந்த வரிசையில் சிவகர்திகேயனுடன் விஜய் டிவியில் டிடி, ரம்யா , பிரியங்கா என்று பல தொகுபாலினிகள் ஜோடி சேர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.ஆனால் விஜய்2 டிவி யில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1-இல் சிவாவுடன் தொகுபாளினியாக பணியாற்றிய பாவனா சிவாவிற்கு மிகவும் பொருத்தமான ஜோடியாக இருந்து வந்தார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் செய்த லூட்டிகள் ஏராளம்.சமீபத்தில் சிவாவை பற்றி பேட்டி ஒன்றில் பேசிய பாவனா சிவகார்த்திகேயனை போல் டைமிங் காமெடி செய்வது யாராலும் முடியாது, களாய்க்கவும் முடியாது.ஆனால் அவர் யாரையும் காயப்படுத்தும் விதத்திலும் கலாய்க்கவும் மாட்டார் என்று கூறியுள்ளார்.

sivakarthikeyan

ஆனால் ஒரே ஒரு விஷயத்துக்கு நான் அவரை குற்றம் கூறுவேன் அது என்னவென்றால் , சிவாவுடன் நான் நிகழ்ச்சிகளில் பணியாற்றும் போது, சிரித்து சிரித்து நிகழ்ச்சி முடிவில் என்னுடைய குரல் காமெடியாகிவிடும், நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கும் குரல்,நிகழ்ச்சியின் முடிவில் இருக்காது.அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான்,அவர் நிகழ்ச்சியின் போது காமெடி செய்வதால் நான் அதிகம் சிரித்து விடுவேன், அதனால் என்னை கிண்டல் செய்வார்கள்,என சிரித்துக் கொண்டே கூறினார் பாவனா.