இன்று மாலை 5 மணிக்கு சர்ப்ரைஸ் தரும் பாவனா ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே

0
7003
Bhavana Anchor

விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவி யின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார்.ஆனால் சில ஆண்டுகளாக இவரது செயல்பாடுகள் அடங்கிவிட்டது.ஆனால் சமீபத்தில் இவர் ட தனது உடல் இடையை குறைத்து அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட பின்னர் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்து விட்டார். இவர் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும் இவர் விஜய் டிவி யில் இருந்த ஒரே காரணம் அவரது குரல் வலம் தான். ஏர்டல் சூப்பர் சிங்கரில் தொகுபாளினியாக பணியாற்றிய போதே பல பகுதிகளில் பாடல்களை பாடியுள்ளார்.மேலும் விரைவில் ஏதேனும் பாடல்களை பாடி வெளியிடுவேன் என்றும் அறிவித்திருந்தார்.

- Advertisement -

இவரது பாடல்களுக்கு சில ரசிகர்களும் உண்டு என்று கூட கூறலாம். சில ஆண்டுகளாக தனது நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ளாமல் இருந்த பாவனா தற்போது அவர் கூறியது போலவே ஒரு பாடகராக அவதரித்து விட்டார். ஆம்,பாவனா ஒரு ஆல்பத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளாராம். அந்த பாடல் இன்று மாலை 5 மணியளவில் நடிகை தமன்னா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர்கள் வெளியிடப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு பாவனாவை ஒரு புதிய பரிமானத்தில் பார்க்கப்போகும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.பாவனா ஏற்கனவே 2014 இல் நடந்த fifa கால்பந்து போட்டிக்காக விஜய் டிவி யில் ஒரு பாடல் பாடி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement