விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவருக்கு ஒரு அக்காவும் இருக்கிறார் அவரும் நம்மில் பலபேருக்கு பரிட்சியமான முகம் தான். அவருடைய பெயர் பிரியதர்ஷினி அவரும் சின்னத்திரையில் மிக பிரபலமானவர் தான்
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பிரியதர்ஷினி,சன், ஜீ ,விஜய் ,கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் 1000 கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் கலைஞர் டி வி யில் ஒளிப்பாரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் பரிசையும் வென்றார்.
தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர், இயக்குனர் பாக்யராஜ் நடிப்பில் 1984 இல் வெளியான “தாவனிக்கணவுகள்” என்ற படத்தில் அவரின் கடைசி தங்கையாகவும் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியதர்ஷினி, பின்னர் இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் பிறந்தார்.
சமீபத்தில் தனது தங்கை டிடியுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த பிரியதர்ஷினி தன்னுடன், தனது மகன் ரிஷியையும் அழைத்து வந்திருந்தார். தற்போது அந்த நிகழ்ச்சியில் அவர்கள் மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.