ஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.
மேலும் இவர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கிறார். மாநகரம், கைதி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன் ,சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், சஞ்சீவ், ஸ்ரீமன், என்று பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்கள் இந்த திரைப்படத்தின் பணிகள் எப்போது நிறைவடைந்த நிலையில் பிரச்சனையால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது ஒரு வழியாக இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தாலும் இதுவரை இவர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு போஸ்டரும் வெளியாகவில்லை அவ்வளவு ஏன் இந்த படத்தின் டீசரில் கூட ஆண்ட்ரியா இடம்பெறவில்லை இதனால் ஆண்ட்ரியா இந்த படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருந்து வந்தது இப்படி ஒரு நிலையில் இன்று நடிகை ஆண்ட்ரியா தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவரது பிறந்த நாள் பரிசாக இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள் மாஸ்டர் படக்குழு. இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய், சஞ்சீவ், ஸ்ரீமன் போன்ற பலர் இருக்கிறார். வாத்தி கம்மிங் பாடலில்விஜய் அணிந்திருக்கும் அதே உடையில் தான் இந்த போஸ்டர்களும் விஜய் இருக்கிறார். எனவே, மாஸ்டர் படத்தில் இடம்பெறும் கெட் டு கெதர் காட்சியில்தான் ஆண்ட்ரியா தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விஜய்யைப் போலவே இந்த படத்தில் ஆண்ட்ரியாவும் ஒரு ப்ரொபஸராக நடித்து இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.