தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார். மேலும், நடிகை ஆண்ட்ரியாவிற்க்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது மேலும் வடசென்னை படத்தில் இவர் அமீருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது வடசென்னை படத்திற்கு பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் ஆண்ட்ரியா.
இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நடிகர் சித்தார்த்துக்கு லிப்ரா கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோவை கண்ட பலரும் கொஞ்சம் வியப்படைந்து இருந்தார்கள். ஆனால், இந்த லிப் லாக் வீடியோ சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அவள் படத்தில் இடம் பெற்ற காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வீடியோவை தற்போது சிலர் வைரலாக பரப்பி வருகின்றனர். ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா அனிருத்துக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகை ஆண்ட்ரியா விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.மேலும், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த பழத்தில் வைட்டமின் நண்பர்களான சஞ்சீவ் ஸ்ரீமன் போன்றவர்களும் கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் மாஸ்டர் மகேந்திரன் சாந்தனு 96 பட புகழ் கௌரி கிஷன் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்த படம் ஏப்ரல் மாதமே வெளியாவதாக இருந்த நிலையில் தற்போது கோரோனா பாதிப்பால் இந்த படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.