‘இது தப்பே இல்ல’ கமலுடன் 10 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா – இதான் காரணமா ?

0
639
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே. அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக நடிகை ஆண்ட்ரியா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பாடகியும் ஆவார். இவர் தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார். முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-
Andriya Jeremiah Calender Shoot Goes Viral

அதற்கு பின்னர் தான் ஆண்ட்ரியா சினிமாவில் நடிகையாக மாறினார். மேலும், இவர் சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தான் ஆண்ட்ரியா நடிகையானார். அந்த படத்தை தொடர்ந்து இவர் ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, மங்காத்தா, விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களில் மூலம் ஆண்ட்ரியா மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார். பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

- Advertisement -

ஆண்ட்ரியா நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது. சொல்லப்போனால் தெலுங்கு பாடலை விட தமிழ் பாடல் தான் மாபெரும் ஹிட் அடித்தது என்று கூறப்படுகிறது. இறுதியாக இவர் விஜய்யின் மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா போன்ற பல்வேறு படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பிசாசு 2 என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Andrea Reveals The Actor Name Who Spoled Her Life

ஆண்ட்ரியாவின் பிசாசு 2:

இந்த படத்தை இயக்கியவர் மிஸ்கின். இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். மேலும், கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க, ஆண்ட்ரியா எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் அடிக்கடி எடுக்கும் தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

-விளம்பரம்-
Andrea About Bold Scene In Pisasu 2 | ஆண்ட்ரியா பிசாசு 2

இன்ஸ்டாவில் ஆண்ட்ரியா:

அதே போல தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகள் செய்வது, யோகா செய்வது இவருடைய வழக்கம். அதோடு இவர் சினிமாவில் செம்ம பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாவில் 2.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர். சமீபத்தில் கூட இவர் எகிப்த், பாரிஸ் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்களையும் பகிர்ந்தார். இந்நிலையில் ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா ஆகிய மூவரும் இருக்கிறார்கள்.

ஆண்ட்ரியா பதிவிட்ட புகைப்படம்:

அந்த புகைப்படத்துடன் தன்னுடைய மற்றொரு புகைப்படத்தையும் இணைத்து தப்பில்லை என்று ஆண்ட்ரியா சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால், அதில் அவர் ஒரே புடவையை பத்து வருடம் கழித்து கட்டியுள்ளேன். ஒரே முறை பயன்படுத்திய உடை மீண்டும் அணியலாம் என்று கூறி #its ok to repeat your outfit என்ற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பத்து வருடத்தில் கொஞ்சம் கூட நீங்கள் மாறவில்லை என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement