அதே லுக், அதே ஸ்கார்ப் – பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை சொன்ன ஆண்ட்ரியா.

0
1615
andrea
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஆண்ட்ரியா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இதையொட்டி நேற்று மாஸ்டர் படத்தில் இருந்து ஆண்ட்ரியாவின் புதிய போஸ்டர் ஒன்றும் மிஸ்கின் இயக்கத்தில் இவர் நடிக்கும் பிசாசு 2 படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் வித்யாசமான கதைகளை எடுக்கும் இயக்குனர்கள் மிகவும் குறைவே. அப்படி எடுப்பதில் இயக்குனர் மிஷ்கினும் ஒரு முக்கியமான இயக்குனர். இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே, பிசாசு,ஓநாயும் ஆட்டுக்குட்டியும். துப்பறிவாளன், சைக்கோ போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் தரமான படங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படம் ஒரு வித்யாசமான பேய் படமாக அமைந்து இருந்தது. தமிழ் சினிமாவில் ஒரு பேயை அன்பான பேயாக காட்டியது என்றால் அது இந்த படத்தின் மூலம் தான்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. மிஸ்கின் தனது திரைப்பயணத்தில் இரண்டம் பாகமாக எடுக்கும் முதல் படம் இது தான். ஏற்கனவே, துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க துவங்கினார் மிஸ்கின். ஆனால், இடையில் இவருக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகினார் மிஸ்கின். தற்போது பிசாசு 2 படத்தை எடுக்க இருக்கிறார்.

நேற்று நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்ட்டர் ஒன்று வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த போஸ்டரில் தான் அணிந்திருக்கும் ஆடை குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஆண்ட்ரியா, அதாவது மறைந்த தனது பாட்டியின் லுக்கை முன் மாதிரியாக வைத்து தான் இந்த லுக்கை அமைத்து இருந்தார்களாம். அதிலும் போஸ்டரில் ஆண்ட்ரியா அணிந்திருக்கும் அந்த ஸ்கார்ப் கூட அவரது பாட்டியுடையதுதானாம்.

-விளம்பரம்-
Advertisement