5 மாடல் அழகிகளுடன் நடிக்கும் அங்காடி தெரு நடிகர் – ப்பா, எப்படி ஆகிட்டார் பாருங்க. வெளியான போஸ்டர்கள் இதோ.

0
960
mahesh
- Advertisement -

தமிழ் திரையரங்குகளில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது கூட அங்காடி தெருவில் வரும் பாடல் எங்கு கேட்டாலும் ரசிகர்கள் மனதில் சந்தோசம் பொங்கும். ஆனால், இந்த படம் பெரிய அளவு வெற்றியை தந்தாலும் மகேஷுக்கு சினிமாத்துறையில் மேன்மேலும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மகேஷ் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். பின்னர் நீண்ட நாட்களுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மகேஷ் “தேனாம்பேட்டை” என்ற படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிச்சுவாகத்தி படத்தில் நடித்த நடிகை அனுஷா நடித்தார். இவர்களுடன் படத்தில் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ். பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சி.டி.கணேசன், ராஜசிம்மன் உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்களும் நடித்தார்கள். இப்படி இந்த படத்தின் வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், இந்த படம் வெளி வந்ததா? இல்லையா? என்று பலருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் மகேஷ் நடிக்கும் புது படத்தின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

மகேஷ் நடிக்கும் ஏவாள் படம்:

தற்போது மகேஷ் அவர்கள் ஏவாள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்களான ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல்.ரவி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முக்கிய கதாநாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் ஒரு பரதநாட்டியக் கலைஞர். பெங்காலியில் சில படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் இதுதான் இவருடைய முதல் படம்.

படத்தில் 5 கதாநாயகிகள்:

இன்னொரு கதாநாயகியாக வரும் கௌரி ஷர்மா பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருக்கிறார். பின் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், இந்திய முன்னணி மாடல் மதுமிதாவும் நடித்திருக்கிறார். இவரை தொடர்ந்து அக்ஷரா ராஜ் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார். பின் மாடல் பர்சிதா சின்காவும் இந்த படத்தில் நடிக்கிறார். இவர் இந்த படம் மட்டும் இல்லாமல் இன்னும் 2 தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பிற நடிகர்கள்:

இப்படி 5 மாடல் அழகிகள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களை தவிர படத்தில் ப்ரவீன் பரமேஸ்வரர் நடித்திருக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க நீளமான தாடி வைத்து உள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும், இந்திய அளவில் முதலிடம் பெற்றவர். இந்த படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் மிப்பு, பிரவீன், மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், ரெஜிமோன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜித்தேஷ் இயக்கி இருக்கிறார்.

படத்தின் கதை:

தனது காதலியின் திடீர் மரணத்துக்கு காரணம் முகம் மறைந்து திரியும் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மை கதாநாயகனுக்கு தெரியவருகிறது. அவனைப் பழிவாங்க கதாநாயகன் செல்கிறார். இதற்கிடையில் பில்லி, சூனியம், ஏவல் என்று பல அமானுஷ்ய சக்திகள் வருகின்றது. இதனடிப்படையில் ஒரு பயங்கர ரொமான்டிக் சைக்கோ திரில்லர் படமாக ஏவாள் அமைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, பாலக்காடு, பீர்மேடு போன்ற பல இடங்களில் நடைபெற்று முடிந்தது. படத்தில் காட்டப்படும் திகில் காட்சிகள் எல்லாம் ஆங்கிலப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி:

படத்தில் சண்டைக்காட்சிகளில் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் போட்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக ஏவாள் அமைந்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மகேஷின் திரைப்படம் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

Advertisement