அஜித் எல்லாம் ஒன்னும் கொடுக்கல – குடுத்தா கொடுத்தனு சொல்லுங்க ஏன் பொய் சொல்றீங்க. அங்காடி தெரு பட நடிகை பேட்டி.

0
115059
ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவை தாண்டி நடிகர் அஜித் ஜென்டில் மேன் என்று பெயரெடுத்தவர். அதேபோல நடிகர் அஜித் பல உதவிகளை செய்துள்ளார் என்று பல பிரபலங்கள் கூறி தான் இதுவரை நாம் கேட்டுள்ளோம். ஆனால், உதவி கேட்டும் அஜித்திடம் இருந்து எந்த உதவியும் வரவில்லை என்று அங்காடித்தெரு பட புகழ் சிந்து கூறியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான ‘அங்காடித் தெரு’ படத்தில் வந்த நடிகை படுத்த படுக்கையாக தனது சிகிச்சைக்கு உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்த படம் பல்வேறு விருதுகளை கூட குவித்து இருந்தது.

- Advertisement -

இந்த படத்தில் இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின்னர் நடைபாதை வியாபாரியான குள்ள மனிதரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அந்த குள்ள வியாபாரியை போலவே குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதற்கான தத்துவத்தை சொல்லும் அந்த சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து. நடிகை சிந்து நாடோடிகள் தெனாவட்டு, நான் மகான் அல்ல, சபரி கருப்பசாமி குத்தகைதாரர், போக்கிரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

வீடியோவில் 5:34 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ அங்காடித்தெரு திரைப்படம் தான். இப்படி ஒரு நிலையில் நடிகை சிந்துவிற்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் தொடர் சிகிச்சைக்கு பணமில்லாததால் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ,மேலும், சினிமாவில் இருக்கும் பல உச்ச நட்சத்திரங்கள் கூட தனக்கு உதவவில்லை என்று கூறியுள்ளார் சிந்து.

-விளம்பரம்-

அந்த பேட்டியில் அஜித் குறித்து பேசிய சிந்து, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சாரை ஒரு 10 முறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் அஜித்தை தொடர்புகொள்ள முடியலன்னு சொன்னார். வெளியில் சொல்ராங்க அஜித்த பத்தி ஹாஹா ஓஹோனு. இந்த தீப்பெட்டி கணேஷுக்கு கூட அஜித் சார் பணம் குடுத்தார்னு சொல்றது எல்லாம் போய். செஞ்சா செஞ்சன்னு சொல்லிட்டு போங்க. ஏன் இப்படி பொய் சொல்ரீங்க.

Advertisement