சிஎஸ்கே அணிக்கு என்னால் பாட்டு போட முடியாது என்று அனிரூத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அனிரூத். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் இசை கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சினிமாவில் உலா பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். கடந்த ஆண்டு வெளியாகி இருந்த டாக்டர் படத்தில் அனிரூத் உடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Advertisement

அனிரூத் பணியாற்றிய படங்கள்:

அதனைத் தொடர்ந்து அவர் அயலான், டான் போன்ற படங்களில் இசையமைத்து இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்திலும் அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் அரபிக் குத்து பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது.

அனிரூத் பணியாற்றும் படங்கள்:

இதனை அடுத்து அனிருத் அவர்கள் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் போன்ற படத்தில் பணியாற்றி இருந்தார். தற்போது இவர் சியான் 60, இந்தியன் 2, உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் பணியாற்றி வருகிறார். இப்படி இவர் இசையமைப்பது மட்டும் இல்லாமல் பாடல் பாடுவது, இசை ஆல்பங்களில் நடிப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

அனிரூத் அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் அனிருத் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் சிஎஸ்கே அணிக்கு பாட்டு போடாத காரணம் குறித்து கூறியது, எனக்கு தோனி என்றால் ரொம்ப பிடிக்கும். சிஎஸ்கே அணிக்கு பாட்டு போட என்னிடம் கேட்டார்கள். பொதுவாகவே சிஎஸ்கே அணி என்று சொன்னால் எல்லோருக்குமே ஞாபகத்தில் வருவது பெரிய விசில் அடிங்க என்று பாடல் தான். 4, 6 ரன் அடித்தாலுமே நமக்கு முதலில் விசில் போடுங்க என்ற அந்த பாட்டு தான் ஞாபகத்தில் வரும்.

Advertisement

சிஎஸ்கே அணி பாட்டு குறித்து சொன்னது:

அந்த இடத்தை யாராலுமே நிரப்ப முடியாது. அதனால் தான் என்னால் பாட்டு போட முடியாது என்று சொன்னேன். இப்ப தலைவர் சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே அண்ணாமலை படத்தில் வர தீம் மியூசிக் தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வரும். அதே போல் தான் சிஎஸ்கே அணி என்று சொன்னாலே விசில் போடு என்ற தீம் மியூசிக் தான் முதலில் வரும். நான் அதை ரீகிரேட் பண்ணாலுமே அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா என்று தெரியாது என்று கூறினார்.

Advertisement