ரஜினியின் பாபா படத்தில் அனிருத் – இதுவரை இதை நோட் செஞ்சி இருக்கீங்களா ?

0
2477
anirudh
- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு உள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார் மேலும், சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் “தர்பார்” ஆகிய இரண்டு படத்திற்கு இவர் தான் இசை அமைத்து இருந்தார் .

-விளம்பரம்-

மேலும், பேட்ட , தர்பார் படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சொல்லப்போனால் சூப்பர் ஸ்டாரின் ரஜினியின் அண்ணாமலை தீம் மியூசிக்கை அப்கிரேட் செய்ததும் அநிருத் தான். அனிருத் அவர்கள் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “3” என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் காலடி பதித்தார்.

- Advertisement -

அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். இதனைத் தொடர்ந்து “வேலையில்லா பட்டதாரி, தங்கமகன், மாரி என பல படங்களில் தனுஷுடன் இணைந்து அனிருத் பணியாற்றி உள்ளார். மேலும், இவர்கள் இருவரின் காம்போவும் வேற லெவல்.இப்படி மாமா மற்றும் மருமகன் இவர்களுக்கும் அனிருத் பட்டைய கிளப்பும் வகையில் இசையை கொடுத்திருக்கிறார்.

அனிருத் அவர்கள் சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், ஸ்டாரின் பாபா படத்தில் வந்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. ஆம், சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘பாபா’ படத்தின் போஸ்டர் ஒன்றில் அனிருத் இருந்திருக்கிறார். அந்த போஸ்டரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement