கமல் சார், லோகேஷ்க்கு கார் கிப்ட் கொடுத்து, சூர்யாவிற்கு வாட்ச் கொடுத்து, அனிருத்க்கு என்ன கொடுத்து’ – பத்திரிக்கையாளர் கேள்விக்கு அனிருத் சொன்ன செம பதில்.

0
405
anirudh
- Advertisement -

கமல் சார் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார் என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு அனிருத் சொன்ன பதில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : பீஸ்ட் பட நடிகர் சதீஷின் மனைவி யார் தெரியுமா ? அடேங்கப்பா இவருக்கு இவ்ளோ பெரிய மகனா.

- Advertisement -

பரிசுகளை அள்ளிக்கொடுத்த கமல் :

பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் பல பரிசுகளை கொடுத்து இருந்தார். லோகேஷ் கனகராஜுக்கு புதிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-165-1024x1024.jpg

சூர்யாவிற்கு Rolex வாட்ச் :

அதுமட்டுமல்லாது விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கும் புதிய பைக் ஒன்றையும் வாங்கி கொடுதற். இப்படி ஒரு நிலையில் சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யாவிற்கு Rolex கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார் கமல். Rolex Day – Date Wrist Watch 128238A K18 என்ற அந்த மாடல் வாச்சின் விலை 54902 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் அதன் விலை 4266612.85 ரூபாய்என்றும் கூறப்பட்டது.

-விளம்பரம்-

வாட்ச் பற்றி லோகேஷ் சொன்ன ரகசியம் :

இப்படி ஒரு நிலையில் சூர்யாவிற்கு கமல் கொடுத்த rolex வாட்ச் புதிய வாட்ச் இல்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘சூர்யா சாருக்கு, கமல் சார் வீட்டுக்கு வரார்ன்னே தெரியாது. சொல்லப்போனால் அது புது வாட்ச் எல்லாம் இல்லை. கமல் சார் மனதுக்கு மிகவும் நெருக்கமான வாட்ச் அது. ரொம்ப வருசமாக அதை வைத்து இருக்கிறார். அதை தான் சூர்யா சாருக்கு கொடுத்தார்’ என்று கூறியுள்ளார் லோகேஷ்.

அனிருத் சொன்ன பதில் :

விக்ரம் படம் வெளியான அணைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் சக்ஸஸ் மீட் கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் ‘கமல் சார், லோகேஷ்க்கு கார் கிப்ட் கொடுத்து, சூர்யாவிற்கு வாட்ச் கொடுத்து’ என்று கேள்வியை முடிக்கும் முன்னரே ‘எனக்கு விக்ரம் படம் கொடுத்ததே கிப்ட் தான்’ என்று சிரித்தபடி கூறுயுள்ளார் அனிருத்.

Advertisement