பீஸ்ட் பட நடிகர் சதீஷின் மனைவி யார் தெரியுமா ? அடேங்கப்பா இவருக்கு இவ்ளோ பெரிய மகனா.

0
1136
sathish
- Advertisement -

பீஸ்ட் படம் நடிகர் சதீஷ் கிருஷ்ணனின் மனைவியின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. தமிழ் திரைப்படத்துறையில் நடிகராகவும், நடன ஆசிரியராகவும் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சதீஷ் கிருஷ்ணன். இவர் ஆரம்ப காலத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் முதல் பாகத்தில் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் தான் இவர் நடன ஆசிரியராக ஆனார் என்று சொல்லலாம். அதன் பின் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே என்னும் படத்தில் நடிகர் வினயின் நண்பனாக நடித்து தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்குப் பின் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் சதீஷ் கிருஷ்ணன் நடித்திருந்தார்.

- Advertisement -

நடிகர் சதீஸ் நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து இவர் தலைவா, தற்காப்பு, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தது சிம்புவின் நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படம் தான். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் நடிகர் சதீஷ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார்.

சதீஷின் சின்னத்திரைப்பயணம்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் மூலம் தான் இவர் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். இது மட்டுமில்லாமல் இவர் முன்னணி நடன ஆசிரியராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவராகவும் சதீஷ் கிருஷ்ணன் பங்கு பெற்று வருகின்றார்.

-விளம்பரம்-

பீஸ்ட் படத்தில் சதீஸ்:

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் கிருஷ்ணன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது என்று சொல்லலாம். இந்த நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

சதீஷின் குடும்ப புகைப்படம்:

நடிகர் சதீஷ் கிருஷ்ணன் அவர்கள் சுவாதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சதீஷ் கிருஷ்ணன் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும் நடிகர் சதீஷுக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் மகளா என்று வியந்து கமெண்ட் போட்டு புகைப்படத்தை லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Advertisement