காதலுக்கு நிறம் ஏதும் முக்கியம் இல்லை புஷ்பவனம் குப்புசாமி குறித்து பேசிய அவரது மனைவி. இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப் பட பின்னணிப் பாடகராக வலம் வருபவர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தன்னுடைய நாட்டுப்புற இசையின் மூலம் ஒட்டு மொத்த தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெற்று உள்ளார். இவர் சென்னை பல்கலைக்கழக இசைத் துறையில் பயின்ற நாட்டுப்புற பாடகியான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார்கள். அதில் மூத்த மகள் பெயர் பல்லவி. இவர் பல் மருத்துவராக பணி புரிகிறார். இரண்டாவது மகள் மேகா. புஷ்பவனம் குப்புசாமி பாடகராக மட்டுமல்லாமல், வீட்டின் அருகில் விஹா என்ற ஆர்கானிக் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

Advertisement

அனிதா குப்புசாமி கூறியது:

இது குறித்து அனிதா குப்புசாமி கூறுகையில் அவருடைய காதல் அனுபவங்களை பற்றி பகிர்ந்து உள்ளார். “நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய சாதியில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் அகர்வால் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் பெரும்பான்மையோர் வணிகம் செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரை எனக்கு திருமணம் செய்ய பார்த்து வைத்திருந்தார்கள். அதனை நான் பின் நிராகரித்து விட்டேன். பின்னர் தான் என்னுடைய படிப்பை தொடர்ந்து. அதன் பின் எனக்கு திருமணத்தில் விருப்பமே இல்லாமல் தான் இருந்தது.

இவர் என்னை காதலிக்கிறேன் என்று என்னுடைய சம்பந்தத்திற்காக இரண்டு வருடங்கள் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். எனக்கு இசை மீது பாகுபாடு இருந்த காரணத்தில் தான் என்னுடைய முழு குறிக்கோளும் நான் எப்படியாவது பின்னணி பாடகியாக மாற வேண்டும் என்று இருந்தது. என் நிலையில்தான் என்னுடைய அப்பா அவர் சொந்த ஊருக்கு என அழைத்துச் சென்று விட்டார். அதன் பின்னே அவர் என்னை விடவே இல்லை. அப்போதுதான் நான் அவரது குரலை மிஸ் செய்தேன். அப்போதுதான் இவர்தான் நமக்கான ஜோடி என்று நான் முடிவு செய்தேன். இது குறித்து என்னுடைய குடும்பத்தில் உனக்கு கூறியபோது எல்லாரும் உனக்கு என்ன பைத்தியமா? என்று தான் கேட்டார்கள்.

Advertisement

நிறம் பற்றி அவர் கூறியது:

இருப்பினும் அவர்கள் அனைவரையும் சம்மதித்து வைத்து அவரை நான் திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு இது எத்தனை நாளுக்கு ஓடும் என்பதை பார்க்கலாம் என்றும் பலர் எங்களை விமர்சித்து வந்தனர். எங்களுக்குத் தோல் முதற்க் கொண்டு அவ்வளவு வித்தியாசங்கள். ஆனால் அதன் பின்னர் தான் இசை எங்களை அப்படி வாழ வைத்தது. கல்யாணம் ஆகி ஒரு வருடம் கழித்து கூட நான் அவர் என்ன ஜாதி என்று நான் கேட்கவே இல்லை. எனக்கு அவருடைய திறமை மட்டும் தான் தெரிந்தது அவருடைய தோற்றமும் நிறமும் தான் குடும்பத்திற்கு ஆகுமா? அதுதான் சோறு போடுமா? என்றும் அனிதா குப்புசாமி கூறியிருந்தார்.

Advertisement

இது குறித்து மேலும் கூறியவர் அந்தக் காலத்தில் நாங்கள் வெறும் ₹7,000 வாங்கிக் கொண்டு முழு கச்சேரியையும் நடத்தி இருக்கின்றோம். ஆனால் இப்போது இரண்டு பேருக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்கள் என்ன கேள்விப்படுகிறேன். நாங்கள் போட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். நன்றாக இருங்கள் அந்த பாதையை நீங்கள் அப்படியே வைத்திருந்தால் நாங்கள் மிகவும் பெருமைப்பட்டு இருப்போம் ஆனால் அப்படி இல்லாமல் அதை கேவலப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்கள் என்றும் அவர் கூறினார்.

.

Advertisement