இத பாத்துமா உன் புருஷன் உசுரோட இருகான் – கமன்ட் செய்தவரின் பொண்டாட்டியை நாறடித்த அனிதா சம்பத்.

0
22698
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது சமூக வளைத்தளத்தில் நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த நபரின் புகைப்படத்தை பதிவிடுள்ளார். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.

இதையும் பாருங்க : இதுவரை யாரும் கண்டிராத விஜய்யின் சிறு வயது பள்ளி குரூப் போட்டோவை பகிர்ந்த விஜய்யின் நண்பர்.

- Advertisement -

அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

அதே போல இவரை யாராவது சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்தால் அவர்களை பதிலுக்கு திட்டி தீர்த்துவிடுகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் ஆடிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதற்கு நெட்டிசன் ஒருவர், கேவலமா இல்லயா கண்டவன் கூட நிக்ரத பெருமையா போட்ருக்க இத பாத்துமா உன் புருஷன் உசுரோட இருகான் என்று கமன்ட் செய்தார். அதற்கு அனிதா சமபத், உன் பெட் ரூம பாரு. நீ இன்ஸ்டால என்ன திட்டி மெசேஜ் பண்ற கேப்ல உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போய்டா போறாங்க என்று பதில் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement