இதுவரை யாரும் கண்டிராத விஜய்யின் சிறு வயது பள்ளி குரூப் போட்டோவை பகிர்ந்த விஜய்யின் நண்பர்.

0
3278
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய், அவரது அப்பா சந்திரசேகர் மூலமாக திரையுலகிற்கு வந்தாலும் தனது தனிப்பட்ட திறமையால் இன்று ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். விஜக்கு போட்டியான நடிகர் என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் தான். என்ன தான் ஒரு சில ரசிகர்கள் தற்போதும் தல தளபதி சண்டையை போட்டுக்கொண்டு வந்தாலும் விஜய் மற்றும் அஜித் இடையே எப்போதும் ஆரோக்யமான உறவு இருக்கிறது என்று பல முறை நிறுப்பித்துள்ளனர்.

-விளம்பரம்-

விஜயின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ்.விஜயுடன் பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும், விஜயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில முக்கிய நிகழ்வுகளில் எப்போதும் அவருடன் இருந்தவர்.விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால்,சஞ்சீவ் எந்த பேட்டியில் பங்குபெற்றாலும் அவரிடம் விஜய் குறித்த கேள்வி கண்டிப்பாக முன்வைக்கப்படும். அதே போல சஞ்சீவ் மற்றும் விஜய் இருவருமே பெரும்பலம் நேரில் சந்தித்துக்கொண்டாள் கூட படங்களை பற்றி அவ்வளவாக பேசுவதும் இல்லை.

இதையும் பாருங்க : பேட்டியை பார்த்துவிட்டு, கிங்காங்கின் 10 வருட ஆசையை நிறைவேற்றிய ரஜினி. என்ன தெரியுமா ? வெளியான போன்கால் ஆடியோ.

- Advertisement -

அவ்வளவு ஏன், நண்பனாக இருந்தாலும் இதுவரை விஜய்யிடம் பட வாய்ப்பு கூட கேட்டதில்லை நடிகர் சஞ்சீவ். சஞ்சீவை போல விஜய்யின் மற்றொரு நண்பர் யார் என்றால் அது ஸ்ரீநாத். இவர் விஜய்யின் நாளைய தீர்ப்பு, வேட்டைக்காரன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பித்தக்கது. மேலும், விஜய்யுடன் இவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் தான்.

இறுதியாக இவர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஞ்சீவ், விஜய்யின் கல்லூரி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் ஸ்ரீநாத், விஜய்யின் பள்ளி குரூப் போட்டோ புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் மாப்ள விஜய் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement