பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடிப்பில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து. இதனால் படத்திற்கு ஒரு இலவச ப்ரமோஷன் கிடைத்திருந்தது. இருப்பினும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் ,இந்த படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை மோகன் இழிவுபடுத்தி கூறியுள்ளார் என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்துதான் வருகிறது. இந்தநிலையில் இந்த படத்திற்கு பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் ஆதரவு தெரிவித்ததாக ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆனது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி ஷங்கர் பின்னர் சின்னத்திரை, சினிமா என்று வேற லெவலில் கலக்கி வருகிறார். அந்த வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான் என்று சொன்னால் அதற்கு ஈடில்லை. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.
அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் கூட நடித்து வருகிறார். சமீபத்தில் அனிதா சம்பத் ட்விட்டர் பக்கத்தில் திரௌபதி படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில், பெரிய நடிகர்கள் இல்லை, அதிக பணம் இல்லை, Media Support இல்லை,அரசியல் தலைவர்கள் துணை இல்லை திரௌபதி இவை அனைத்தும் இருந்த ஜிப்ஸி திரௌபதியிடன் மண்ணை கவ்வுகுறது, அதுவும் சென்னையில் சாதித்து விட்டீர்கள்
இந்த டீவீட்டை கண்ட திரௌபதி இயக்குனர் மோகனும், அனிதா சம்பத்திற்கு நன்றி தெரிவித்தார். ஆனால், பின்னர் தான் தெரிந்தது அது அனிதா சம்பத் பெயரில் இயங்கி வரும் போலி கணக்கு என்று. இது குறித்து அனிதா சம்பத் தனது அதிகார பூர்வ கணக்கில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், போலியான அக்கௌன்ட், அவ்ளோ தான் சொல்ல முடியும்..ஏதோ ஒரு கேவளவாதி அவன் சொல்ல நினைக்கிற எல்லாத்தையும் கோழைத்தனமா என் பெயர பயன்படுத்தி சொல்லிட்டு இருக்கான்..ஐய்யயோ இது நான் இல்லனு கதறி அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பல. என்னுடைய உண்மையான Id ய விரைவில் சேர்க்கிறேன் அதை பின் தொடருங்கள் என்று கூறியுள்ளார் அனிதா சம்பத்.