நர்ஸாக மாறிய அனிதா சம்பத். இணையத்தில் கலக்கும் இளம் பெண்கள்.

0
22212
anitha
- Advertisement -

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி ஷங்கர் பின்னர் சின்னத்திரை, சினிமா என்று வேற லெவலில் கலக்கி வருகிறார். அந்த வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான் என்று சொன்னால் அதற்கு ஈடில்லை. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-

அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத். இதுபோக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூர்யா வணக்கம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் அனிதா சம்பத்.

- Advertisement -

அனிதா சம்பத் பல படங்களில் நடித்தாலும் இன்னும் இவருக்கு லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அனிதா சம்பத் ஒரு வெப் தொடரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அனிதா சம்பத். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்துள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இவரது திருமணம் திடீரென்று நடைபெற்றுள்ளது.

தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் அனிதா சம்பத். திருமணத்திற்கு பின்னர் மீண்டும் செய்திவாசிப்பாளராக பணியாற்ற துவங்கினார் அனிதா சம்பத். செய்திவாசிப்பாளர் மற்றும் சினிமாவில் துணை நடிகையாக இருந்த அனிதா சம்பத் தற்போது வெப்சீரிசிலும் கலக்க வருகிறார் .இதில் அனிதா சம்பத் செவிலியராக நடித்துள்ளார். இதில் ஆர், ஜே. ஆனந்தா, ஹரிஜா என இணையதள பிரபலங்களும் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த சில காலமாகவே பல்வேறு முன்னணி நடிகைகள் கூட சினிமாவை போல வெப் சீரியஸில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே சினிமாவை விட வெப் சீரியஸில் நடிகைகளுக்கு முக்கிய கதாபாத்திரம் மிகவும் எளிதாக கிடைத்து விடுகிறது. சமீபத்தில் கூட நடிகை சமந்தா வெப் சீரியஸில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement