அடிப்படை அறிவு கூட இல்லாத வெகுளி 90ஸ் கிட் கூட்டம் – அனிதா சம்பத் பகிர்ந்த தனது 8ஆம் கிளாஸ் புகைப்படம்.

0
1905
anitha
- Advertisement -

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி ஷங்கர் பின்னர் சின்னத்திரை, சினிமா என்று வேற லெவலில் கலக்கி வருகிறார். அந்த வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான் என்று சொன்னால் அதற்கு ஈடில்லை. ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CFZJjfRBloX/

அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத். இதுபோக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூர்யா வணக்கம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் அனிதா சம்பத்.

- Advertisement -

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்துள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இவரது திருமணம் திடீரென்று நடைபெற்றுள்ளது. சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அனிதா சம்பத் சமீபத்தில் தனது 8 ஆம் வகுப்பில் எடுத்த ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், எட்டாங்கிளாஸ் அனிதா சம்பத்..ஆசிரியர்கள் தினத்தன்று யாருக்கும் தெரியாமல் வகுப்புக்கு யாரோ கேமரா கொண்டு வந்தாங்க..அப்ப ஆசிரியர்கள் யாரும் இல்லாத போது டக்கென எடுத்தது.. வெளிச்சத்துக்கு எதிர நின்னு போட்டோ எடுக்கணும்ங்கிற அடிப்படை அறிவு கூட இல்லாத வெகுளி 90ஸ் கிட் கூட்டம். வகுப்புலயே height orderல முதல்ல நிக்கிற குட்டி பொன்னு 12th வரைக்குமே நான் தான் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement