தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் முடித்தவர், பின்னர் அன்னா யுனிவர்சிட்டியில் எலெக்ட்ரிக் மீடியா கம்யூனிகெசன் முடித்தார். ஃபில்ம் அண்ட் டெலிவிசம் துறையில் மாஸ்டர் டிகிரியும் முடித்துள்ளார் ஆனந்த்.
பின்னர், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் துணை இயக்குனராக இரண்டு வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். கமலின் உன்னியப் போல் ஒருவன் படத்தில் டையலாக் எடிட்டராகவும் அதே படத்தில் ஒரு சின்ன ரோலிலும் நடித்துள்ளார்.
பின்னர் கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளிவந்த ஆரோ 3D ஆடியோ தொழில்நுட்ப படமான விஸ்வரூபம் படத்திலும் சூப்பர்வைசிங் சௌண்ட் எடிட்டராகவும் பணியாற்றினார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்திலும் சௌன்ட் டிசைனர் ஆனந்த கிருஷ்ணன் தான். திரைக்குப் பின்னால் இயங்கிவந்தாலும் நடிப்பை விட்டுவிட மாட்டேன் என ஆணித்தனமாக கூறியுள்ளார் ஆனந்த்.




