உங்கள் சைஸ் என்ன? அநாகரீகமாக கேள்வி கேட்டவருக்கு அஞ்சனா கொடுத்த பதில்.

0
87854
anjana-Rangan
- Advertisement -

சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-32.png

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வருகிறார்.

இதையும் பாருங்க : அஜித்தை சாதி வெறியராக சித்தரித்தவர்களுக்கு தனது மகள் மற்றும் அஜித்தை வைத்து பதில் அளித்த திரௌபதி பட இயக்குனர்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் தொகுப்பாளினி அஞ்சனா ஒருவர். தொகுப்பாளினி அஞ்சனா அவர்கள் அடிக்கடி சமூக வளைத்தளத்தில் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அதே போல அஞ்சனா அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதும் வழக்கம். சமீபத்தில் அஞ்சனா தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாராகமில் சாட்டிங்கில் ஈடுபட்டார்.

-விளம்பரம்-

அப்போதும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார் அஞ்சனா. அப்போது ரசிகர் ஒருவர் அஞ்சனாவிடம் உங்கள் மார்பகத்தின் சைஸ் என்ன என்று மிகவும் அநாகரிகமான கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்க்கு பதில் அளித்த அஞ்சனா, பட்டாணி அளவு கொண்ட உங்கள் மூளையை விட கொஞ்சம் பெரிது தான் என்று பதில் அளித்துள்ளார். ஒரு குழந்தைக்கு அம்மா என்று பாராமல் இப்படி அநாகரிகமாக கேள்வியை கேட்டுள்ள அந்த நபரை என்ன சொல்வது.

Advertisement