அஜித்தை சாதி வெறியராக சித்தரித்தவர்களுக்கு தனது மகள் மற்றும் அஜித்தை வைத்து பதில் அளித்த திரௌபதி பட இயக்குனர்.

0
14438
Draupathi
- Advertisement -

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் இயக்கத்தில் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் நடித்துள்ள திரௌபதி திரைப்படம் தமிழ் சினிமாவில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உட்பட பலர் நடித்து உள்ளார்கள். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளி வந்தது. இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியானவுடன் சோசியல் மீடியாவில் மூன்று நாட்களுக்கு மேலாக டாப் 5 ட்ரெண்டிங்கில் இது தான் இருந்தது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் பலரும் இந்த படத்தின் ட்ரைலரை பார்த்து பாராட்டி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள். ஆனால், இந்த படத்தின் டிரெய்லரில் ஜாதி ஆவணக் கொலைகளை ஆதரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்று உள்ளது என்று கூறி இந்த படத்தை வெளியிட தடை கூறி பல பிரச்சனைகளை செய்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த படத்தின் ட்ரெய்லர் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் சுமார் 4 மில்லியன் வியூஸ் மேல் கடந்து உள்ளது.

இதையும் பாருங்க : படையப்பா படத்துல இதெல்லாம் கேவலமா இருக்கும். உண்மையை ஒப்புக்கொண்ட கே எஸ் ரவிகுமார். வீடியோ இதோ.

- Advertisement -

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் அஜித்துடன் இயக்குனர் மோகன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் இந்த படத்தினை அஜித் ஆதரிக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் கூறியது, இது எல்லாம் வதந்தி. இதை நம்பாதீர்கள். இது பல வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படம். சினிமா உலகமும், அஜித் ரசிகர்களும் குழம்பி விடக் கூடாது என்பதற்காக தான் ட்விட்டரில் இதை பதிவிட்டு வருகிறேன் என்று கூறி இருந்தார்.

அதே போல சமீபத்தில் பிரபல பத்திரிகையில் பிரபல பத்திரிகை ஒன்றில் அஜித்தையும் இந்த படத்தையும் இணைத்து செய்தி ஒன்று வெளியானது. மேலும், சாதி வெறியை ஆதரிக்கிறாரா அஜித்? என்றும் தலைப்பை வைத்திருந்தனர். இதற்கு பதில் அளித்த இயக்குனர் மோகன், எங்கள் படத்திற்கும் தல அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நான் அவர் ரசிகன், கதாநாயகன் அவர் உறவு என்பதால் மட்டுமே தல பெயரை குமுதம் விளம்பரத்திற்காக பயன்படுத்துவது தவறான செயல்.

-விளம்பரம்-

இந்த படம் என் எழுத்து என் உரிமை. இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. வாழுங்கள், வாழ விடுங்கள் என்று ட்விட்டரில் பதில் தெரிவித்தார். அதே போல அந்த பத்திரிகையில் அஜித் குறித்து வந்த செய்திக்கு தற்போது தனது மகளை வைத்து மீண்டும் பதில் அளித்துள்ளார் மோகன். அந்த வீடியோவில் அஜித் குறித்து வந்த அந்த பத்திரிகைக்கு தனது மகளை முத்தம் கொடுக்க வைத்துள்ளார் மோகன்.

மேலும் , அந்த பதிவில் இந்த வார குமுதத்தில் திரெளபதி பற்றி கட்டுரை எழுதி சம்மந்தமில்லாத மனிதரை சம்மந்தப்படுத்திய அந்த நபர்களுக்கு நானும் என் மகளும் தரும் அன்பு பரிசு இதான்.. என்றும் தல என் மரியாதைக்குரியவர். என்று பதிவிட்டு, திரெளபதி படத்திற்கும் அஜித்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை மீண்டும் உறுதி படுத்தியுள்ளார் இயக்குனர் மோகன்.

Advertisement