3 வயசு தான் வித்யாசம். ஆனால், ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்துள்ள பிரபலம் – நோண்டி எடுத்த நெட்டிசன்கள்.

0
727
rajini
- Advertisement -

அண்ணாத்த படத்தில் அப்பத்தாவாக நடித்த நடிகைக்கும் ரஜினிக்கும் மூன்று வயது தான் வித்தியாசமாம். தற்போது இதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். மலையாள சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் குலப்புள்ளி லீலா. இவர் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேடை நாடகங்களின் மூலம் தான் இவர் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் மருது படத்தின் மூலம் தான் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் நாச்சியார், மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்துள்ளார். உண்மையை சொல்லப்போனால் இவருக்கு 67 வயது தான் ஆகிறது. ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிறது. இருந்தாலும் படத்தில் ரஜினிக்கு அப்பத்தாவாக குலப்புள்ளி லீலா நடித்து இருக்கிறார். இது யாராலும் நம்ப முடியாத ஒன்று.

- Advertisement -

அதைவிட ரஜினியின் மகள் வயதில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து இருப்பது குறித்து சோஷியல் மீடியாவில் பயங்கர விமர்சனங்கள் வந்திருக்கும் நிலையில் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்த அப்பத்தாவின் கதாபாத்திரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் பிற்காலத்தில் அக்கா, அம்மா என்று நடிப்பது வழக்கம் தானே.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த மீனா. பின் அவருக்கு ஜோடியாக நடித்தார். எதிர்காலத்தில் அவர் அம்மாவாக கூட நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும், அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இதுபோன்று எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

-விளம்பரம்-
Advertisement