அண்ணாத்தைக்காக ஆட்டை பலி கொடுத்த ரஜினி ரசிகர்கள் – வைரலான புகைப்படத்தால் வலுக்கும் கண்டனங்கள்.

0
888
annatha

உலகமுழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ரஜினியின் ஒரு சில ரசிகர்கள் ஒரு ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டி பலி கொடுத்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பேனரை வைத்து அதன்முன் மேளதாளம் முழங்க ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்.

இதையும் பாருங்க : அத சொன்னதும் ஐயோ தெய்வமேனு என் கால்ல வந்து விழுந்தாரு வடிவேலு – சீமான் அண்னனின் லேட்டஸ்ட் வீடியோ.

- Advertisement -

பின் ஒரு ஆட்டின் தலையை வெட்டி பலி கொடுத்து அதன் ரத்தத்தை பேனரில் இருந்த ரஜினியின் படத்தின் முன்பு தெளித்தனர். இந்த சம்பவம் எந்த இடத்தில் நடைபெற்றது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த ஈவு இரக்கமற்ற செயலை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான பிரபலங்களுக்காக பால் அபிஷேகம், பூஜை, அன்னதானம், ரத்ததானம் என பல விஷயங்களை செய்தும் வரும் நிலையில் இந்த மாதிரி இரக்கமற்ற செயல் தேவை அற்றது.

ஆட்டை பலி கொடுத்து கொண்டாட்டம்

சமீப காலமாகவே ஒரு சில தீவிர ரசிகர்கள் இந்த மாதிரி கொடூர செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இப்படி ஆட்டை கொடூரமான முறையில் பலிகொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் சுதீப் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது ரசிகர்கள் எருமை மாட்டை வெட்டி பேனருக்கு ரத்தத்தில் அபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement