உலகமுழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பு, நயன்தாரா, மீனா உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்து உள்ளனர். மேலும், இந்த படத்தில் குஷ்பூ மற்றும் மீனாவின் கதாபாத்திரம் சீக்ரெட்டாகவே இருந்து வருகிறது.
இந்த படத்திற்கு இமான் இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் மியூசிக் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த படம் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது.
அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ‘அண்ணாத்த’ பாடல் செம ஹிட் அடித்தது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ் பி பி தான் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று வெளியாகி இருக்கிறது. அதில் முழுக்க முழுக்க ரஜினி மட்டுமே இடம்பெற்றுள்ளார்.